கமலேசுவர் படேல்

இந்திய அரசியல்வாதி

கமலேசுவர் படேல் (Kamleshwar Patel) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார்.

கமலேசுவர் படேல்
Kamleshwar Patel
உறுப்பினர், மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013 மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தல்
தொகுதிசிகாவல்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிரீத்தி படேல்
பிள்ளைகள்ஈசா படேல், ஈசான் படேல்
பெற்றோர்
  • இந்திரசித்து குமார் (தந்தை)
வாழிடம்(s)சிதி, மத்தியப் பிரதேசம், இந்தியா
கல்விஇளங்கலைச் சட்டம்[1]
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்kamleshwarpatel.com

கமலேசுவர் படேல் 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக சிகாவால் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவரது தந்தை, இந்திரசித்து குமார், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார். மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கமலேசுவர் படேல் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

• மந்திரிசபை அமைச்சர் (பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி) [2] டிசம்பர் 2018 முதல் மார்ச் 2020 வரை.

• 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் [3] 2018 ஆம் ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ( சிகாவால் -சிதி) .

சட்ட விவகாரங்கள்

தொகு

நீதிமன்ற அமர்வுக்கு நேரில் வர முடியாததால், கமலேசுவர் படேல் நிரப்பிய மருத்துவப் படிவத்தில் போலியாக பதிவு செய்ததற்காக இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுமாறு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்பொழுது வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. [4] [5]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  2. "Kamal Nath expands Cabinet; inducts 28 ministers, including 2 women". The Economic Times. 2018-12-25. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/28-legislators-take-oath-as-ministers-in-madhya-pradesh/articleshow/67243311.cms. 
  3. "MLA Information". பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
  4. Editorial, Team (25 May 2017). "Court orders FIR against Sihawal MLA Kamleshwar Patel". Naidunia. naidunia.jagran.com. https://naidunia.jagran.com/madhya-pradesh/jabalpur-court-orders-fir-against-shivlal-mla-kamleshwar-patel-1171025. பார்த்த நாள்: 16 May 2018. 
  5. Kale, Makarand (16 June 2017). "FIR lodged against Congress MLA on the orders of the High Court". ETV MP/Chhattisgarh. hindi.news18.com. https://hindi.news18.com/madhya-pradesh/bhopal-news-fir-lodged-against-congress-mla-kamleshwar-patel-at-bhopal-1018367.html. பார்த்த நாள்: 16 May 2018. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேசுவர்_படேல்&oldid=3801151" இலிருந்து மீள்விக்கப்பட்டது