கமல்சித் எஸ் பாவா
கமல்சித் எஸ் பாவா (Kamaljit S. Bawa)(இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், ஏப்ரல் 7, 1939 அன்று பிறந்தார்) கமல்ஜித் சிங் பாவா ஒரு பரிணாம சுற்று சூழல், பாதுகாப்பு உயிரியல் ஆர்வலர். இவர் மாசசூசெட்ஸ், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர். இவர் அசோகா டிரஸ்ட் எனப்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆராய்ச்சிக்கான (ATREE) தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். 2012 ஆம் ஆண்டில், பாவா முதல் குன்னேராஸ் பேண்தகுநிலை விருது, பேண்தகுநிலை குறித்த ஆராய்ச்சிக்காக உலகின் முக்கிய சர்வதேச விருது பெற்றார். இவர் கலை மற்றும் அறிவியல் துறையில் அமெரிக்கன் அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[1]. இமயமலையில் உள்ள காலநிலை மாற்றம்குறித்த அவரது முன்னோடி ஆராய்ச்சிக்காக சுமார் 100,000 அமெரிக்க டாலர் மதிப்புமிக்க மிடோரி பரிசு வென்றுள்ளார்.[2]