கமல் தேசாய்
இந்திய நாவலாசிரியர்
கமல் தேசாய் (Kamal Desai) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மராத்தி மொழியில் நாவல்கள் எழுதினார்.[1] இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
பெல்காம் மாவட்டத்தில் உள்ள யம்கான் மார்டியில் பிறந்தார். பெல்காமில் படித்தார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் மராத்தியில் முதுகலைப் பட்டம் முடித்தார்.[2] கமல் தேசாய் 1955 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார் மற்றும் புனேவில் ஓய்வு பெற்றார்.[1]
1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொப்பி அணிந்த பெண் என்ற நாவலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.
- ரேங்கு (நிறங்கள்), கதைகள் (1962)
- ரேட்ராந்தின் அம்கா யுதாச்சா பிரசாங்கு (நாங்கள் இரவும் பகலும் போரை எதிர்கொள்கிறோம்), நாவல் (1963)
- கால சூர்யா (இருண்ட சூரியன்), நாவல் (1972)
- ரேங்கு-2, கதைகள் (1998)[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Tharu, Susie J; Lalita, Ke (1993). Women Writing in India: The twentieth century. pp. 265–67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1558610294.
- ↑ 2.0 2.1 Miller, Jane Eldridge (2001). Who's who in Contemporary Women's Writing. pp. 81–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415159806.