கமல நாராயண கோயில்
கமல நாராயணா கோயில் (Kamala Narayana Temple) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்திலுள்ள தேவ்கானில் அமைந்துள்ளது.[1] இக்கோயில் கதம்ப வம்சத்தால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கதம்ப மன்னர் சிவசித்த பெர்மாடியின் ராணியான கமலா தேவியின் தலைமை கட்டிடக் கலைஞரான திப்போஜாவால் கட்டப்பட்டது.[2] இந்த கோயில் கி.பி.1174 இல் கட்டப்பட்டது.[2] இங்கு நாராயணன் முக்கிய தெய்வமாக இருக்கிறார்.[3]
கட்டிடக்கலை
தொகுஇக்கோயிலில் சிங்கங்கள் மற்றும் மலர் உருவங்கள் உள்ளிட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் மூன்று கலங்கள் உள்ளன. எனவே திரிகூடக் கோயில்களின் வகைப்பாட்டின் கீழ் வருகிறது.[2] இங்கு மூன்று சிவாலயங்கள் உள்ளன. முதல் சன்னதியில் நாராயணனின் திருவுருவம் உள்ளது. இரண்டாவதாக இலட்சுமி நாராயணனின் மடியில் இலட்சுமி தேவி அமர்ந்துள்ளவாறு சிலை உள்ளது. மூன்றாவது சன்னதியில் ராணி கமலா தேவியின் சிலை உள்ளது. அவரது உதவியாளர்கள் அவரது இருபுறமும் காணப்படுகின்றனர். கோயிலின் உட்புற மேற்கூரையில் தலைகீழ் வடிவத்தில் பிரமாண்டமான தாமரை மலர் செதுக்கப்பட்டுள்ளது. கோயில் கூரையானது செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களின் மேல் உள்ளது. கர்ஜிக்கும் சிங்கங்களைக் கொண்ட தூண்கள் இந்த தூண்களைச் சுற்றி பிரமிடு கோபுரங்கள் மற்றும் அவற்றுக்கிடையே பெண் குழந்தைகள் மற்றும் மேல் அழகான சுருள் வேலைப்பாடுகள் உள்ளன. கோயிலின் முகப்பில் உள்ள கல் பலகைகளில் கதம்ப வம்சத்தின் சின்னங்கள் மற்றும் பிற உருவங்களும் காணப்படுகின்றன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kadamba glory". Archived from the original on August 29, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-03.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Sadashiv S. Mugali, Sadashiv (16 April 2017). "TEMPLE ARCHITECTURE OF KADAMBAS OF GOA: A STUDY". 5th International conference on Recent developments in Engineering science, humanities and management. http://data.conferenceworld.in/ESHM5/P36-41.pdf.
- ↑ Achari, Soumya Narayan (28 February 2011). "Miscellany". Deccan Herald. https://www.deccanherald.com/content/141768/miscellany.html.