கமுகறை புருஷோத்தமன் நாயர்

கமுகறை புருஷோத்தமன் நாயர் மலையாள சினிமாவின் ஆரம்பகாலப் பின்னணிப் பாடகர்களில் ஒருவர் (1930 - 1995). கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு என்ற ஊரில் 1930 டிசம்பர் 4 ஆம் தேதி பிறந்தார்

வாழ்க்கை

தொகு

இசைப் பின்னணி கொண்ட குடும்பம். புருஷோத்தமனும் அவர் தங்கை லீலாவும் இளமையிலேயே இசை பயின்றார்கள். 13 ஆம் வயதில் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் சன்னிதியில் பாடி அறிமுகமானார். 15 ஆம் வயதில் அன்றைய திருவிதாங்கூர் அரசின் வானொலியில் பாட வாய்ப்பு கிடைத்தது

1953ல் பொய்க்குதிரை என்ற படத்துக்காக ஒரு சிறிய பாடலைப் பாடினார். அதன்பின் தொடர்ந்து திரைப்பாடல்களைப் பாடினார். ஆத்மவித்யாலயமே, ஏகாந்ததையுடே அபார தீரம், மற்றொரு சீதையை காட்டிலேக்கயச்சு, ஈஸ்வர சிந்தயிதொந் போன்றபாடல்கள் மிகப்பிரபலமானவை

திருவட்டாற்றில் தனியார் உயர்நிலைப்பள்ளியை நடத்திவந்தார். 1995 மே மாதம் 26 ஆம் தேதி மறைந்தார்