கம்பர் காலப் பாண்டியன்
கம்பர் காலத்துப் பாண்டிய மன்னன் ஒருவன் பாடியதாக ஒரு பாடல் உள்ளது.[1] பொருள் கொடுத்தால் பாவலர்கள் போற்றுவார்கள். பொருள் கொடுக்காவிட்டால் தூற்றுவார்கள். சொன்ன சொல்லை மாற்றியும் பொருள் கூறுவர். ஆகவே பாவலர்கள் கூற்றுவனைக் காட்டிலும் கொடியவர்கள் என்று அவன் பாடியிருக்கிறான்.[2]
அடிக்குறிப்பு
தொகு- ↑ தனிப்பாடல் திரட்டு பக்கம் 45-54
- ↑
போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்
தூற்றினுந் தூற்றுவர் சொன்ன சொற்களை
மாற்றினு மாற்றுவர் வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே. – பாடல் 36 - ↑
மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ
உன்னை யறிந்தோ தமிழை யோதினேன்- என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு.- பாடல்37 - ↑
வில்லம்பு சொல்லம்பு மேதினியி லிரண்டுண்டு
வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்- வில்லம்பு
பட்டுதடா வென்மார்பிற் பாண்டியா நின்குலத்தைச்
சுட்டுதடா வென்வாயிற் சொல்.(பாடல் 47)