கம்லா சங்க விளையாட்டரங்கம்
கம்லா சங்க விளையாட்டரங்கம் (Kamla Club Ground) இந்தியாவிலுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரிலுள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும். முக்கியமாக துடுப்பாட்டப் போட்டிகளை ஒழுங்கமைக்க இவ்வரங்கம் பயன்படுகிறது,. 1999/00 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உத்தரபிரதேச துடுப்பாட்டக் கூட்டமைப்பு அகாதமியின் தாயகமாகவும் கருதப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு வடக்கு மண்டல துடுப்பாட்ட அணிக்கும் தெற்கு மண்டல துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நடைபெற்றபோது [1] ஒன்பது முதல் தர துடுப்பாட்ட போட்டிகள் இங்கு நடைபெற்றிருந்தன. [2]
கம்லா சங்க விளையாட்டரங்கம் Kamla Club Ground | |
---|---|
முழு பெயர் | கம்லா சங்க விளையாட்டரங்கம் |
இடம் | இந்தியாஉத்திரப் பிரதேசம், கான்பூர் |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1932 |
திறவு | 1932 |
உரிமையாளர் | கம்லா சங்கம் |
ஆளுனர் | கம்லா சங்கம் |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | 15,000 |
1988 முதல் 2007 வரை மேலும் எட்டு முதல் தர போட்டிகள் இங்கு நடைபெற்றன. இரயில்வே துடுப்பாட்ட அணிக்கும் மத்திய பிரதேச துடுப்பாட்ட அணிக்கும் இடையில் போட்டி நடைபெற்றபோது [3] மேலும் ஒன்பது பட்டியல் ஏ போட்டிகளும் நடைபெற்றன. ஆனால் அப்போது முதல் அரங்கத்தில் தரமற்ற போட்டிகள் மட்டுமே நடைபெறுகின்றன. [4] அரங்கம் 15,000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியைக் கொண்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம், வீர்ர்களுக்கான உடைமாற்றும் அறைகள் பந்து வீசும் இயந்திரம், காணொளி பகுப்பாய்வு வசதி போன்ற பிற வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Scorecard
- ↑ First-class matches
- ↑ Scorecard
- ↑ Other matches
- ↑ "Uttar Pradesh Cricket Association Academy". Archived from the original on 10 July 2015. பார்க்கப்பட்ட நாள் 4 September 2015.