கயா சிங்

இந்திய அரசியல்வாதி

கயா சிங் (Gaya Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் 1943 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். தொழிலாள வர்க்கத்தின் அமைப்பாளராகவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்.

கயா சிங்
மூத்த தொழிற்சங்கத் தலைவரும், பொதுவுடைமைக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கயா சிங்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
8 சூலை 1992 (1992-07-08) – 7 சூலை 1998 (1998-07-07)
பதவியில்
8 சூலை 1998 (1998-07-08) – 7 சூலை 2004 (2004-07-07)
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1943
அலவன், நாலந்தா மாவட்டம், பீகார்
இறப்பு(2017-10-07)7 அக்டோபர் 2017[1]
பட்னா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி

கயா சிங் 1960 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்தார். பீகாரில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், தேசிய செயலாளர்களில் ஒருவராகவும் ஆனார். பின்னர் தொழிலாள வர்க்கத்தின் அமைப்பாளராகப் பணியாற்றி அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தேசியத் தலைவரானார். இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பீகார் பிரிவின் தலைவராக இருந்தார். இக்கட்சியின் தேசிய அளவிலான செயலாளர்களில் ஒருவராகவும் பணியாற்றினார். 1992 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதி முதல் 1998 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி வரையிலும், 1998 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 ஆம் தேதிமுதல் 2004 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதி வரையிலுமாக இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். நீண்ட காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கயா சிங் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று தன்னுடைய 76 ஆவது வயதில் காலமானார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Trade union leader Gaya Singh dies".
  2. "Members Page". 164.100.47.5.
  3. "Veteran Communist Leader Com. Gaya Singh, Ex-M.P. Died". www.communistparty.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயா_சிங்&oldid=3844050" இலிருந்து மீள்விக்கப்பட்டது