கரகர வண்டி என்னும் விளையாட்டு சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று.

கரகர வண்டி சுழலும் முறையைக் காட்டும் படம்

இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு தானே சுழல்வது இந்த ஆட்டம். வண்டி என்னும் சொல் வட்டமாக உள்ள சக்கரத்தைக் குறிக்கும். பாட்டுப் பாடிக்கொண்டே சுற்றுவர். சுற்றும்போது வரும் கிறுகிறுப்பு ஒருவகைத் தனி இன்பம். சுற்றும்போது மயக்கம் வந்தால் உட்கார்ந்துகொள்வர். அல்லது படுத்துக்கொள்வர்.

ஆட்டப் பாடல் 1

கரகர வண்டி, காமாட்சி வண்டி (இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே சுற்றுவர்)

ஆட்டப் பாடல் 2

ஆட்டு பூட்டு. அண்ணன் கொடுத்த சீட்டு (திரும்பத் திரும்ப)

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலமத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகர_வண்டி&oldid=4164507" இலிருந்து மீள்விக்கப்பட்டது