கரலாக்கட்டை
கரலாக்கட்டை[1] (Indian club) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் குறிப்பாக தமிழர்களின் உடற்பயிற்சி உபகரணங்களில் ஒன்றாகும். கரலை என்பதன் பொருள் திடமான, தடிமனான, உருண்டையான என பல வகை அர்த்தங்கள் உள்ளது.
கரலாக்கட்டையின் வகைகள்
தொகு- முழங்கை கரலை
- இருபக்க பிடிக்கரலை
- கை கரலை
கை கரலையின் வகைகள்
தொகு- ஒல்லி கரலை
- குண்டு கரலை அல்லது தொப்பை கரலை
ஒரு நபரின் முழங்கையின் அளவு இருப்பதால், இதனை 'முழங்கை கரலை' என்று அழைக்கப்படும். இதன் எடை 2 இருந்து 3 கிலோ அளவு இருக்கும். ஒரு நபர் புதியதாக கரலை பயிற்சி எடுப்பதற்கு முதலில் இக்கரலையை தான் பயன்படுத்துவார்கள்.
பயன்கள்
தொகுகையில் தசை மற்றும் நரம்பு சுருக்கத்தை சரிசெய்து இயக்கத் தன்மையை சீராக்குகிறது...
இருபக்க பிடிக்கரலை
தொகுஇதன் நடுப்பகுதியில் எடை பயிற்சி பெறும் நபரின் வலிமையை பொருத்து கூடுதலாகவும், அல்லது குறைவாகவும் இருக்கும். ஆரம்பத்தில் குறைவான எடையில் கரலை செய்து பயிற்சி பெறவேண்டும்.
பயன்கள்
தொகுகைகள் மற்றும் மார்பு பகுதியை வலிமை ஏற்ற பயன்படுகிறது
கை கரலை
தொகுகை கரலை என்பது ஒரு நபரின் 'கையின் நீளஅளவு' இருக்கும். இதன் உயரம் ஒவ்வொரு நபரை பொறுத்து மாறுபடும். இதில் உடலின் வலிமையை பொறுத்து எடையின் அளவை வைத்துக் கொள்ளலாம். கரலைப் பயிற்சியில் நின்று கொண்டும், கரலை சுற்றும் போதும் அதற்கேற்றார்போல் கால்களை மாற்றி கொண்டும் பயிற்சி பெறலாம். அவற்றில் ஒல்லி கரலை, குண்டு கரலை அல்லது தொப்பை கரலை என பல வகைப்படும். இந்த கரலையை ஒரு கை மற்றும் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு பயிற்சி பெறலாம்.
ஒல்லி கரலை, குண்டு கரலை அல்லது தொப்பை கரலை
தொகுகரலைப் பயிற்சியில் நின்று கொண்டும், கரலை சுற்றும் போதும் அதற்கேற்றார்போல் கால்களை மாற்றி கொண்டும் பயிற்சி பெறலாம்.
பயன்கள்
தொகுகரலை பயிற்சியின் மூலம் மூச்சுப்பாதை சீராகி நுரையீரல் வலிமையடைகின்றன. இதனால் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ முடியும். இப்பயிற்சி மூலம் கால்களும் வலிமையடைகின்றன. கரலை பயிற்சி குறிப்பாக மல்யுத்த வீரர்கள் அதிகமாக பயிற்சி எடுக்கிறார்கள் ஏனெனில் இதனால் மனவலிமையும் அதிகரித்து தைரியத்துடன் எதிரியிடம் போரிடவும் முடிகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ கரலாக்கட்டை தமிழர்கள் பயன்படுத்தும் ஒரு உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகும். கரலை என்பதன் பொருள் திடமான, தடிமனான, உருண்டையான என பல வகை அர்த்தங்கள் உள்ளது.
- ↑ https://www.silambamfederation.org/