கரலியத்த பண்டார

கரலியத்த பண்டாரன் (Karaliyadde Bandara) கண்டி இராச்சியத்தின் மூன்றாவது மன்னனாக கிபி 1551 முதல் 1581 வரை ஆட்சி புரிந்தான். இவனது தந்தை ஜயவீர பண்டாரத்தின் பின்னர் கண்டியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவனின் குடும்பம் இராஜ சிங்கனுக்கு அஞ்சி போர்த்துகேயரிடம் தஞ்சமடைந்து இவன் போர்த்துக்கேயருடன் ஒரு உடன்பாட்டினை மேற்கொண்டான். இவனுக்குப் பின்னர் இவனது மகள் தோனா கதரீனா ஆட்சியேறினாள். இவள் குசுமாசனா தேவி எனவும் அழைக்கப்பட்டாள். இவள் டொனா கதரீனா எனும் பெயரிலும் மருமகன் யமசிங்க பண்டார தொன் பிலிப் எனும் பெயரில் கத்தோலிக்க மதத்தை தழுவினார்கள்.[1]

கரலியத்த பண்டாரன்
கண்டி மன்னன்
ஆட்சி1551-1581
முன்னிருந்தவர்ஜயவீர ஆஸ்தானன்
பின்வந்தவர்தோனா கதரீனா
வாரிசு(கள்)தோனா கதரீனா
மரபுசிறீ சங்கபோதி
தந்தைஜயவீர ஆஸ்தானன்


இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. கண்டி ராச்சியம் (PDF). கல்வி வெளியீட்டுத் துறை இலங்கை. பார்க்கப்பட்ட நாள் 12 October 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரலியத்த_பண்டார&oldid=3537601" இலிருந்து மீள்விக்கப்பட்டது