கரவு தொழில்நுட்பம்

கரவு தொழினுட்பம் (stealth technology) ஒரு இராணுவ உத்திகள் மற்றும் முடக்க மின்னணு எதிர்வினையின் ஒரு துணை துறையாகும். இந்த தொழினுட்பம், பொருள்களைக் கண்டறியும் கருவிகளுக்கு எதிராக பொருள்களுக்குக் குறைந்த அவதானிக்கக்கூடிய தன்மையை அளிக்கிறது. நவீன போர் நுட்பங்களில் இது அளப்பரிய பங்காற்றுகிறது. தற்கால வானூர்திகள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், மற்றும் ஏவுகணைகளில் கரவு தொழினுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கதிரலைக் கும்பாவாலோ(Radar), ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு மூலமோ(Sonar), காட்சி, ஒலி, மற்றும் அகச்சிவப்பு முறைகள் மூலமோ கரவு தொழில்நுட்ப பொருள்களைக் கண்டறிவது கடினம்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Rao, G.A.; Mahulikar, S.P. (2002). "Integrated review of stealth technology and its role in airpower". Aeronautical Journal 106 (1066): 629–641. doi:10.1017/S0001924000011702. 
  2. Mahulikar, S.P.; Sonawane, H.R.; Rao, G.A. (2007). "Infrared signature studies of aerospace vehicles". Progress in Aerospace Sciences 43 (7–8): 218–245. doi:10.1016/j.paerosci.2007.06.002. Bibcode: 2007PrAeS..43..218M. http://dspace.library.iitb.ac.in/xmlui/handle/10054/613. 
  3. Richelson, J.T. (10 September 2001). "Science, Technology and the CIA". The National Security Archive. The George Washington University. பார்க்கப்பட்ட நாள் 6 October 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரவு_தொழில்நுட்பம்&oldid=4165024" இலிருந்து மீள்விக்கப்பட்டது