கரவைக் கிழார்
கரவைக் கிழார் (இயற்பெயர்: க. கந்தசாமி) ஈழத்து எழுத்தாளர்.
கரவைக் கிழார் | |
---|---|
பிறப்பு | க. கந்தசாமி யாழ்ப்பாணம், கரவெட்டி |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
கந்தசாமி யாழ்ப்பாணம், கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பனங்காமத்துத் தலைவனாகிய கயிலாய வன்னியன் பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தருக்குப் பணிய மறுத்துப் பன்னிரண்டாண்டுகள் திறை செலுத்தாமற் போராடி வீழ்ந்த கதையை நாடக நூலாக இவர் எழுதியுள்ளார். இந்நூல் தணியாத தாகம் என்ற பெயரில் 1968 ஆம் ஆண்டில் வெளிவந்தது,[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ சமூக மாற்றத்துக்கான அரங்கு, க.சிதம்பரநாதன்