கரிமகிரிப்டான் வேதியியல்
கரிமகிரிப்டான் வேதியியல் (Organokrypton chemistry) கரிமகிரிப்டான்களின் தயாரிப்பு மற்றும் பண்புகளை விவரிக்கிறது. கார்பனுக்கும் கிரிப்டானுக்கும் இடையிலான வேதிப்பிணைப்புகளால் கரிமகிரிப்டான் சேர்மங்கள் உருவாகின்றன.
கரிமசெனான் சேர்மங்களைக் காட்டிலும் கரிமகிரிப்டான் மிகக் குறைவாகவே அறியப்படுகின்றன. முதல் கரிமகிரிப்டான் சேர்மமான HKrCCH 2003 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அசிட்டிலீனில் கிரிப்டான் அணுவை ஒளிச்சேர்க்கை மூலம் புகுத்தியே இச்சேர்மம் உருவாக்கப்பட்டது.[1] HKrC4H மற்றும் HKrC3N ஆகிய சேர்மங்களும் இதே தயாரிப்பு முறையில் ஈரசிட்டிலீன் மற்றும் சயனோ அசிட்டிலீன் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டன.[2] இவை அனைத்தும் அணி தனிமைப்படுத்தல் செயல்முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். 40 கெல்வின் வெப்பநிலை வரையில் இவை நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன..[3] HKrCCF மற்றும் HCCKrF ஆகியவையும் அணி தனிமைப்படுத்தல் செயல்முறையில் சோதனை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.[4]
2,4,6-மும்மெத்தில்பிரிடினின் விலகல் எலக்ட்ரான் அயனியாக்கம் மூலம் உருவாக்கப்பட்ட இருநேர்மின்னயனிகள் கிரிப்டானுடன் வினைபுரிந்து கரிமகிரிப்டான் நேர்மின்னயனிகளான C8H7NKr2+ மற்றும் C8H8NKr2+ ஆகியவற்றை உருவாக்குகின்றன.[5] கிரிப்டானுடனான அசிட்டிலீன் இருநேர்மின்னயிகள் வினையினால் HCCKr2+ அயனி உருவாகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Khriachtchev, Leonid; Tanskanen, Hanna; Cohen, Arik; Gerber, R. Benny; Lundell, Jan; Pettersson, Mika; Kiljunen, Harri; Räsänen, Markku (2003). "A Gate to Organokrypton Chemistry: HKrCCH". Journal of the American Chemical Society 125 (23): 6876–6877. doi:10.1021/ja0355269. பப்மெட்:12783534.
- ↑ Khriachtchev, Leonid; Räsänen, Markku; Gerber, R. Benny (2009). "Noble-Gas Hydrides: New Chemistry at Low Temperatures". Accounts of Chemical Research 42 (1): 183–191. doi:10.1021/ar800110q. பப்மெட்:18720951.
- ↑ Bartlett, Neil (2003). "The Noble Gases". Chemical and Engineering News 81 (36): 32–34. doi:10.1021/cen-v081n036.p032. http://pubsapp.acs.org/cen/80th/noblegases.html.
- ↑ Khriachtchev, Leonid; Domanskaya, Alexandra; Lundell, Jan; Akimov, Alexander; Räsänen, Markku; Misochko, Eugenii (2010). "Matrix-Isolation and ab Initio Study of HNgCCF and HCCNgF Molecules (Ng = Ar, Kr, and Xe)". The Journal of Physical Chemistry A 114 (12): 4181–4187. doi:10.1021/jp1001622. பப்மெட்:20205379. Bibcode: 2010JPCA..114.4181K.
- ↑ Zins, Emilie-Laure; Schröder, Detlef (2011). "Influence of the structure of medium-sized aromatic precursors on the reactivity of their dications towards rare gases". International Journal of Mass Spectrometry 299 (1): 53–58. doi:10.1016/j.ijms.2010.09.017. Bibcode: 2011IJMSp.299...53Z. https://archive.org/details/sim_international-journal-of-mass-spectrometry_2011-01-01_299_1/page/n60.
- ↑ Ascenzi, Daniela; Tosi, Paolo; Roithová, Jana; Ricketts, Claire L.; Schröder, Detlef; Lockyer, Jessica F.; Parkes, Michael A.; Price, Stephen D. (2008). "Generation of the organo-rare gas dications HCCRg2+ (Rg = Ar and Kr) in the reaction of acetylene dications with rare gases". Physical Chemistry Chemical Physics 10 (47): 7121–7128. doi:10.1039/B810398D. பப்மெட்:19039346. Bibcode: 2008PCCP...10.7121A.