கரிமமாகல்
கரிமமாகல் (Organification) என்பது தைராய்டு சுரப்பிகளில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் செயல்முறையாகும். தைராய்டு வளரூக்கி சுரப்பதற்காக தைரோகோளப் புரதத்தில் நிகழும் அயோடின் சேர்க்கைச் செயல்முறையே கரிமமாகல் எனப்படுகிறது.[1]
பெராக்சைடால் அயோடைடு ஆக்சிசனேற்றம் செய்யப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் ஒரு படிநிலையாகும். அயோடின் ஒரு கனிம வேதியியல் தனிமம் என்பதால் அது கரிம வேதியியல் புரதமான தைரோகோளப் புரதத்துடன் இணைக்கப்படுவதால் இச்செயல்முறை அயோடின் கரிமமாகல் செயல்முறை எனப்படுகிறது.[2]