கரிம வேதி வினை

கரிம வேதி வினைகள் அல்லது சேதன இரசாயனத் தாக்கங்கள் (organic reactions) என்பது கரிமச் சேர்மங்களில் நடைபெறும் தாக்க வகைகளாகும். இவற்றை இருவகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:

  • கூட்டல் தாக்கம்
  • பிரதியீட்டுத் தாக்கம் என்பனவாகும்.[1][2][3]

கூட்டல் தாக்கம்

தொகு

சேதனச் சேர்வையுடன் தாக்கி தாக்கத்திலீடுபட்டு அதனுடன் சேருமாயின் அது கூட்டல் தாக்கம் எனப்படும்.

பிரதியீட்டுத் தாக்கம்

தொகு

சேதனச் சேர்வையுடன் தாக்கி தாக்கத்திலீடுபட்டு அதிலுள்ள ஒரு அணு அல்லது அணுக்கூட்டத்துக்குப் பதிலாக அது பிரதியிடப்படுமாயின் அது பிரதியீட்டுத் தாக்கம் எனப்படும்.

இவற்றை பின்வருமாறு மூன்றாகவும் வகைப்படுத்தலாம். அவையாவன:

  • கருநாட்டத் தாக்கம்
  • இலத்திரனாட்டத் தாக்கம்
  • சுயாதீன மூலிகத் தாக்கம் என்பனவாகும்.

கருநாட்டத் தாக்கம்

தொகு

சேதனச் சேர்வையொன்றுடன் கருநாடியொன்று தாக்கமுற்று விளைவை உண்டாக்குமாயின் அது கருநாட்டத் தாக்கம் எனப்படும். இங்கு கருநாடி என்பது எதிரேற்றம் பெற்ற துணிக்கைகளாகும்.

இலத்திரனாட்டத் தாக்கம்

தொகு

சேதனச் சேர்வையொன்றுடன் இலத்திரனாடியொன்று தாக்கமுற்று விளைவை உண்டாக்குமாயின் அது இலத்திரனாட்டத் தாக்கம் எனப்படும். இங்கு இலத்திரனாடி என்பது நேரேற்றம் பெற்ற துணிக்கைகளாகும்.

சுயாதீன மூலிகத் தாக்கம்

தொகு

சேதனச் சேர்வையொன்றுடன் சுயாதீன மூலிகமொன்று தாக்கமுற்று விளைவை உண்டாக்குமாயின் அது சுயாதீன மூலிகத் தாக்கம் எனப்படும். இங்கு சுயாதீன மூலிகம் என்பது தனியிலத்திரனைக் கொண்ட (சுயாதீன இலத்திரன்) துணிக்கைகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Strategic Applications of Named Reactions in Organic Synthesis Laszlo Kurti, Barbara Czako Academic Press (March 4, 2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-429785-4
  2. J. Clayden, N. Greeves & S. Warren "Organic Chemistry" (Oxford University Press, 2012)
  3. Robert T. Morrison, Robert N. Boyd, and Robert K. Boyd, Organic Chemistry, 6th edition, Benjamin Cummings, 1992
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_வேதி_வினை&oldid=4165029" இலிருந்து மீள்விக்கப்பட்டது