கரிஷ்மா (சி ஆர் - 1 - 6) (நெல்)

கரிஷ்மா (சி ஆர் - 1 - 6) (Karishma (CR-1-6) என்பது; 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஜி ஈ பி - 24 (GEB-24) என்ற நெல் இரகத்தையும், டீ (என்) 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். புன்செய் எனப்படும் மானாவாரி பகுதிகளில் நன்கு வளரக்கூடிய, இது ஒரு எக்டேருக்கு சுமார் 4000 கிலோ (40 Q/ha) மகசூல் தரவல்லது. மேலும், இவ்வகை நெற்பயிர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச, தாராய் பிராந்தியம், மற்றும் குசராத்து பகுதிகளில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]

கரிஷ்மா (சிஆர்-1-6)
Karishma (CR-1-6)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜி ஈ பி - 24 x டீ (என்) 1
வகை
புதிய நெல் வகை
காலம்
125 - 130 நாட்கள்
வெளியீடு
1974
நாடு
 இந்தியா

சான்றுகள்

தொகு
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 17 - Karishma (CR-1-6)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிஷ்மா_(சி_ஆர்_-_1_-_6)_(நெல்)&oldid=3238485" இலிருந்து மீள்விக்கப்பட்டது