கருக் குழாய் ஆய்வு

ஒரு வகையான கதிர்வீச்சு செயல்பாடு

கருக்குழாய் ஆய்வு (Hyterosalpingography) என்பது ஒரு சிறப்பு ஆய்வாகும். பெண்கள் கருவுறுதலில் ஏற்படும் சிக்கலுக்குத் தீர்வு காண இவ்வாய்வு துணைசெய்கிறது. கருவுறுதலுக்கு ஏற்றச்சூழலில் ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து கருக்கட்டல் நிகழ்கிறது. இந்நிகழ்வு பொதுவாக கருக்குழாயில் (Fallopian tube) நிகழும். கருக்கட்டிய முட்டை கருக்குழாய் வழியாக கருப்பையை அடைந்து, கருப்பைச் சுவருடன் ஒட்டிக் கொண்டு அங்கு வளரும். ஏதாவது காரணத்தால் கருக்குழலில் அடைப்பு ஏற்பட்டால் முட்டையும் விந்தணுவும் இணையும் வாய்ப்பு தடைபடுகிறது. எனவே கருவுறுதலும் தவிர்க்கப்படுகிறது. இதனைத் தெரிந்து கொள்ளவே கருக்குழாய் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவே கருக்குழாய் ஆய்வு எனப்படும்.

கருக் குழாய் ஆய்வு
இடையீடு
ICD-9-CM87.8
MeSHD007047
MedlinePlus003404

இவ்வாய்விற்காக, ஒப்புமையைக் (contrast medium) கூட்டும் சாதாரண அயோடின் கொண்ட நீர்மம், கருப்பையினுள் சற்று அழுத்தத்தில் செலுத்தப்படும். இந்த நீர்மம் கருக் குழாய் மூலம் சென்று சினைப்பை அருகில் சென்று அடையும். குழாயில் அடைப்பு இருந்தால் இது நிகழ வாய்ப்பில்லை. இவ்வாய்வினை மேற்கொள்ளும் மருத்துவர் கவனமாக, மருந்து பெண்ணுறுப்பில் சிந்திவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டும். மருந்து செலுத்தியதும் எக்சு-கதிர் படம் எடுக்கப்படுகிறது. படத்தினை ஆய்ந்து நிலையினைத் தெரிந்து கொள்ளமுடியும். குழாய் அடைப்பேயன்றி வேறு காரணங்களாலும் கருதரிப்பதில் தடை ஏற்படலாம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்_குழாய்_ஆய்வு&oldid=3598819" இலிருந்து மீள்விக்கப்பட்டது