கருசூழ் படலங்கள்

கருசூழ் படலங்கள்(extraembryonic membranes) என்பது கரு வளா்ச்சிக்கு உதவும் நான்கு படலங்களாகும். இத்தகைய படலங்கள் மனிதர் முதல் பூச்சிவரை அனைத்து விலங்குகளிலும் அமைகின்றன. அவை கருமுட்டைகளிலிருந்து உருவானாலும் அவை கருமுட்டையின் பகுதியாக கருதப்படுவதில்லை. இவை பொதுவாக ஊட்டச்சத்து, வளிமப்பரிமாற்றம், கழிவு நீக்கம் ஆகியவற்றில் பங்கு வகிக்கின்ற்ன.[1]

பறவைகள், ஊர்வன, மற்றும் பாலூட்டிகளில் நான்கு செந்தரக் கருசூழ் படலங்கள் உள்ளன. அவை, நுகம் சுற்றியுள்ள நுகப்பை, கருவைச் சுற்றி அதைத் தாங்கும் பனிக்குடம், கருக்கழிவைத் தேக்கிவைக்கும் கருக்கழிவுப் படலம், (இது மேலும், வளிமப் பரிமாற்றத்துக்கும் புறவோட்டில் இருந்து கால்சியத்தை உறிஞ்சவும் உதவுகிறது.)கருப்பைப் புறணி என்பனவாகும். கருப்பைப் புறணி முன்கூறிய அனைத்தையும் சூழ்ந்தமைகிறது. இது முட்டை உருவாகும் நிலையில் கருக்கழிவுப் படலத்தோடு இணைந்து மூச்சுயிர்க்கவும்கழிவுநீக்கவும் உதவும் கருப்புறணிக் கழிவுப் படலமாக மாறிவிடுகிறது.[2]

பூச்சியின் கருசூழ் படலங்களாக, முகைப்புறணிக்கலங்களில் இருந்து உருவாகும் ஊனீர்ப் படலம், பனிக்குடக் குழி(இதன் வெளிப்பாடு செர்க்நல்ட் மரபனால் கட்டுபடுத்தப்படுகிறது), நுகப்பை ஆகியன அமைகின்றன. [3]


மாந்தரிலும் பாலூட்டிகளிலும் இவை கருக்குழவிப் படலங்கள் எனப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. William K. Purves; Gordon H. Orians; H. Craig Heller (5 December 2003). Life: The Science of Biology. W. H. Freeman. பக். 423. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7167-9856-9. https://books.google.com/books?id=3_cIZqwSfdYC&pg=PA423. 
  2. Noble S. Proctor; Patrick J. Lynch (1993). Manual of Ornithology: Avian Structure & Function. Yale University Press. பக். 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-300-05746-6. 
  3. Schmitt-Ott, Urs; Kwan, Chun Wai (2016-02-11). "Morphogenetic functions of extraembryonic membranes in insects". Current Opinion in Insect Science 13: 86–92. doi:10.1016/j.cois.2016.01.009. பப்மெட்:27436557. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருசூழ்_படலங்கள்&oldid=3738142" இலிருந்து மீள்விக்கப்பட்டது