கருணை பிரகாசர்
கருணை பிரகாசர் பதினேழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய எழுத்தாளர். தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில், தமிழ் பேசும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தவர். ஐந்திற்கும் மேற்பட்ட நுால்களை இயற்றிய இவர், சைவ சித்தாந்தத்தை போற்றியவர். தன் பதினாறாவது வயதில் திருமணமான இவர், தன் பதினெட்டாம் வயதில் முக்தி அடைந்தார். அதனால் இவருக்குக் குழந்தைகள் கிடையாது.[1]
வாழ்க்கை
தொகுகருணை பிரகாசர் தமிழ்நாட்டிலுள்ள தொண்டை மண்டலமான காஞ்சிபுரத்தில் தமிழ் பேசும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தார். பதினேழாம் நுாற்றாண்டில் வாழ்ந்தார்.[2]
தந்தை
தொகுஇவா் தந்தை குமாரசாமி தேசிகர், ஆன்மிகத் தலைவர். இவா் தொண்டை மண்டலத்தல் மக்களுக்கு அர்ச்சகர் மற்றும் தீக்ஷிதராக இருந்தார். குடும்பத்தை விட்டுவிட்டு அடியார்களுடன் திருவண்ணமாலை சென்ற இவா் துறவறம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால் இறைவன் இவருக்குத் திருமணமாகச் செய்து, மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளையைப் பெறச் செய்தார்.
உடன் பிறந்தவா்கள்
தொகுகருணை பிரகாசா் இரண்டாவது குழந்தை. உடன் பிறந்தவர்கள் சிவபிரகாசர்,[3] வெள்ளையார் மற்றும் ஞானாம்பிகை அம்மாள்.
மூத்த அண்ணன், சிவப்பிரகாசர், சிவ அனுபூதி செல்வா் என்றும், கற்பனைக் களஞசியம் என்றும் போற்றப்படுகிறார்.
இவா் தங்கை ஞானம்பிகை சாத்தனுார் சாந்தலிங்க அடிகளை மணந்து கொண்டார்.
தம்பி வெள்ளையார் மீனாட்சி அம்மாளை மணந்து கொண்டார். இவா் தன் 72 ஆம் அகவையில் முக்தி அடைந்தார்.
கல்வி
தொகுகருணைபிரகாசா், தன் அண்ணன் சிவப்பிரகாச சுவாமிகளுடன் திருவண்ணாமலை, திருச்செந்துாா் போன்ற கோவில்களைத் தமிழகம் எங்கும் சென்று வழிபட்டார். திருநெல்வேலியில் பண்டிதர் வல்லியூர் தம்பிரானிடம் இருவரும் தமிழ் இலக்கணம் பயின்றனர்.
பின் காமாட்சி என்பவரை மணந்து கொண்டார். பின் தன் பதினெட்டாம் வயதில் முக்தி அடைந்தார். அவா் முக்தி அடைந்த பின் அவரால் முடிக்கப் பெறாத நுால்கள் அவா் தம்பி வெள்ளையாரால் முடிக்கப் பெற்றன.
நுால்கள்
தொகுஇஷ்ட லிங்க அகவல்
சீகலாதி சருக்கம்
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Karunai Prakasar: Wikipedia
- ↑ VALAVANUR. "KARUNAI PRAKASAR". karunaiprakasar.blogspot.in. Retrieved 29 March 2015.
- ↑ Siva Prakasar