கருணை மனு (இந்தியா)
கருணை மனு (ⓘ) என்பது இந்தியாவில் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் மரணதண்டனையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, மாநில முதல்வர், மாநில ஆளுனர், இந்தியப் பிரதமர், உச்ச நீதிமன்றம் அல்லது இறுதியாக இந்தியக் குடியரசு தலைவரிடம் உரிய காரணங்களுடன் விண்ணப்பிக்கும் கோரிக்கையாகும்.
ஏற்கத்தக்க காரணங்கள் காட்டும் மரணதண்டனை கைதிகளின் கருணை மனுக்களின் பேரில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது.
விதி விலக்குகள்
தொகுஇந்திய ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளிலும் மற்றும் இந்திய ஒன்றிய அரசின் தடா போன்ற சட்டங்களின் கீழ் மரணதண்டனை பெற்ற கைதிகளின் கருணை மனுக்களின் பேரில் மரணதண்டனை கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்ய முடியாது என ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [1][2]