கருத்துருவாக்கம்

கருத்துருவாக்கம் (idealization) என்பது பல பொருட்களில் காணப்படும் ஒருமித்த பண்புகளை மொழியால், குறியீட்டால் குறிப்பது ஆகும். அதுவே பொதுமைக்கருத்தாகும். புலன்காட்சி அனுபவத்தின் விளைவாக தோற்றுவிக்கப்படுவது பொதுமைக்கருத்தாகும். பொதுமைப்பிரிதலும், பொதுமைப்படுதலும் கருத்து உருவாதலின் இரு முக்கிய படிநிலைகளாகும்.[1][2][3]

கருத்தின் இயல்பும் வகைகளும்

தொகு

கருத்துகள் அவற்றின் இயல்பின் அடிப்படையிலும், எதனைப்பற்றியது என்பதன் அடிப்படையிலும் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

எளிமைக்கருத்து

தொகு

ஒன்றின், ஒரு நிகழ்வின் ஒரே ஒரு பண்பை மட்டும் பொதுமைப்படுத்தி அதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படும் கருத்து எளிமைக்கருத்தாகும்.உதாரணமாக உருவத்தின் அடிப்படையில்,நிறத்தின் அடிப்படையில், அளவின் அடிப்படையில் என ஏதேனும் ஒரு பண்பின் அடிப்படையில் அமைக்கப்படுவது (சதுரம், வட்டம், முக்கோணம், நீலநிறம், சிவப்புநிறம்) ஒரு பண்பு மட்டுமே ஒன்றினைப்பற்றிக் கூற அடிப்படையாக அமைகின்றது.

சிக்கலானகருத்து

தொகு

பொருள்களுக்குள்ள பண்புகளில் ஒன்றிற்கு மேற்பட்ட பண்புகளைக் கருத்தில் கொண்டு அப்பண்புகளை இணைத்து அதனடிப்படையில் உருவாக்கப்படுவது சிக்கலான கருத்து எனப்படும்.உதாரணம் (பந்தாட்டக்குழு, சிறிய சிவப்பு நிற பூக்கள்)

பொருட்கள் பற்றிய கருத்துகள்

தொகு

இது ஒரு பொருளின் பண்பின் அடிப்படையில் கூறப்படுவது. எடுத்துக்காட்டு (புத்தகம், வீடு)

இணைப்பொதுமைக்கருத்து

தொகு

பசு, வீடு (பசு நம் கலாச்சரத்தில் வீட்டுடன் இணைத்து அறியப்படுகிறது)

கருத்துப்படங்களின் கல்விப்பயன்கள்

தொகு
  • பாடத்தை முழுமையாகப் பொருளுணர்ந்து கற்க உதவும்
  • கருத்துகளை வரிசைப்படுத்தி கற்பிக்க கற்க உதவுகின்றன.

சான்று

தொகு

கற்றலின் மனித மேம்பாட்டின் உளவியல் - பேரா. அ. அந்தோணிசாமி-சம்யுக்தா பதிப்பகம்.

மேற்கோள்கள்

தொகு
  1. About the Poznań School, see F. Coniglione, Realtà ed astrazione. Scuola polacca ed epistemologia post-positivista, Catania:CUECM 1990
  2. B. Hamminga, N.B. De Marchi (Eds.), Idealization VI: Idealization in Economics, Poznań Studies in the Philosophy of the Sciences and the Humanities, Vol. 38, Rodopi:Atlanta-Amsterdam 1994
  3. Friedman, Milton (1953). "The Methodology of Positive Economics". Essays in Positive Economics. Chicago: University of Chicago Press. p. 14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்துருவாக்கம்&oldid=4165040" இலிருந்து மீள்விக்கப்பட்டது