கருத்துரு இயற்பியல்

இயற்பியல் கற்பிக்கும் முறை

கருத்துரு இயற்பியல் (Conceptual Physics) என்பது இயற்பியலை கணிதத்தின் துணையின்றி இயற்பியலாக கற்பிக்கும் ஒரு கலையாகும். தகுந்த உபகரணங்களையும், அன்றாட வாழ்வில் நாம் காணும் செயல்களையும் பாடங்களுடன் இணைத்து இயற்பியலை கற்பிக்கும் போது மாணவர்கள் பாடங்களை எளிதாகக் கற்க இயலுவதாக அறியப்பட்டுள்ளது. இயற்பியலை விளக்கக் கணிதமோ சமன்பாடோ பயன்படுத்தப்படுவதில்லை.[1]

1971 ஆம் ஆண்டு பால் சி கெவிட் (Paul G. Hewitt) என்ற இயற்பியல் அறிஞர், கருத்துரு இயற்பியல் (Conceptual Physics) என்ற புத்தகத்தின் மூலம், இந்த புதிய கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.[2] கணக்கீடுகள் எதுவும் இல்லாமல் இயற்பியலை தர்க்கரீதியாக பகுத்தறியும் முறையை, தனது புத்தகத்தில் சிறப்பாக விளக்கியிருந்தார்.[3]இயற்பியலை தர்க்கரீதியாக பகுத்தறிந்து கற்பிக்கும் முறையை பால் சி கெவிட், தனது முதல் புத்தகத்தில் விளக்கவில்லை.[4] இயற்பியலை தர்க்கரீதியாகப் பகுத்தறியும் முறையில் வெற்றியடைந்தார். 2014 ஆம் ஆண்டு அவரது புத்தகம் 12வது பதிப்பைப் பெற்றது.[5][6]

கருத்துரு இயற்பியல் கோட்பாட்டைப் பின்னர் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.[7] கருத்துரு இயற்பியல் புத்தகத்தின் மூலம் மாணவர்களின் அடைவுநிலை இயற்பியலில் உயர்ந்தது கண்டறியப்பட்டது.[8]

இந்த கற்பிக்கும் முறை, உலகிலேயே சிறந்ததாக உணரப்படுகிறது. அனைத்து இயற்பியல் ஆசிரியர்களும் தெரிந்திருக்க வேண்டிய முறையாகும்.

மேற் கோள்கள் தொகு

  1. Hewett, Paul G. (1985). Conceptual Physics (5th ). Little, Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-316-35974-2. 
  2. Hewitt, Paul G. (1971). Conceptual Physics: A New Introduction to your Environment. Little, Brown and Co. 
  3. Ford, Kenneth W. (October 1971). "Conceptual Physics: A New Introduction to Your Environment". Physics Today 24 (10): 54–55. doi:10.1063/1.3022390. Bibcode: 1971PhT....24j..54H. 
  4. Ballif, Jae R.; William E. Dibble (1969). Conceptual Physics: Matter in Motion. Wiley. https://books.google.com/books?id=zq7vAAAAMAAJ. 
  5. Hewett, Paul G. (2014). Conceptual Physics (12th ). Pearson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-321-90910-7. 
  6. Hewitt, Paul G. (2009). Conceptual Physics: The High School Physics Program (3rd ). Pearson/Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-133-64749-5. https://archive.org/details/conceptualphysic0000hewi_q3g2. 
  7. Hehn, Jack; Michael Neuschatz (February 2006). "Physics For All? A Million and Counting!". Physics Today 59 (2): 37–43. doi:10.1063/1.2186280. Bibcode: 2006PhT....59b..37H. http://www.aip.org/statistics/trends/reports/million.pdf. பார்த்த நாள்: 2017-07-05. 
  8. White, Susan; Casey Langer Tesfaye (August 2010). "High School Physics Courses and Enrollments". Focus On (American Institute of Physics Statistical Research Center). http://www.aip.org/statistics/trends/reports/highschool3.pdf. பார்த்த நாள்: 2017-07-05. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்துரு_இயற்பியல்&oldid=3581156" இலிருந்து மீள்விக்கப்பட்டது