கருத்தோட்டப் பெயர்வு

கருத்தோட்டப் பெயர்வு (paradigm shift) என்பது வழமையான, ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியில் செய்யப்படும் அல்லது கருதப்படும் ஒன்று முற்றிலும் புதிய, வேறான வழியில் மாற்றப்படும் நிகழ்வு ஆகும்.[1][2] இக்கருத்து தாமசு கூன் என்ற அமெரிக்க அறிவியல் வரலாற்றாசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு துறையின் மையக் கருத்துகள் குறுகிய காலத்திற்குள் பொதுவாக மாற்றமடைவதில்லை; புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் புதியவர்கள் துறையில் உள்ளபோது இத்தகைய கருத்தோட்டத்தில் பெயர்வு ஏற்படும் என்று கூன் கருதினார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "மெரியம்-வெபுஸ்டர்சு: Definition of paradigm shift". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2022.
  2. "கேம்பிரிட்சு இணைய அகராதி: meaning of paradigm shift". பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  3. "தி இந்து: What is 'paradigm shift' in philosophy?". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தோட்டப்_பெயர்வு&oldid=3918390" இலிருந்து மீள்விக்கப்பட்டது