கருநாடக - மேலைத்தேச இசைகள் ஒப்பீடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கருநாடக இசைக்கும் மேலைத்தேச இசைக்கும் இடையான வேறுபாடுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
இல | கர்நாடக இசை | மேலைத்தேச இசை |
---|---|---|
1 | 72 தாய் ராகங்கள் உண்டு. | மேஜர்ச்கேல், மைனர்ச்கேல் என 2 மேளம். |
2 | இராகத்தை விஸ்தாரமாகப் பாடலாம். | Notation லிருந்து வாசிக்கலாம். |
3 | கமகங்கள் காணப்படுகின்றன. | அவ்வாறு இல்லை. |
4 | வாய்ப்பாட்டு இசைக்கு கூடுதல் முக்கியத்துவம். | கூட்டு வாத்திய இசைக்கு கூடுதல் முக்கியத்துவம். |
5 | இசையை விளக்க வீணை வாத்தியம். | எல்லா நுட்பத்தையும் கொண்ட பியானோ. |
6 | பஞ்சகதி பேதம் உண்டு. | சதுசுரகதி, திசுரகதி பேதங்களே உண்டு. |
7 | கச்சேரியில் 2-5 பேர் பக்கவாத்தியம் வாசிப்பர். | அதிக வாத்தியக்காரர் கலந்து கொள்வர். |
8 | தெய்வ சங்கீதம். | லெளகீக சங்கீதம். |
9 | சரிகமபதநி- சப்தசுவரங்கள். | CDEFGAB- 7 சுவரங்கள். |
10 | பாடல் எழுதுவது- script notation எனப்படும். | பாடல் எழுதுவது- staff notation எனப்படும். |
11 | குரல் வளத்திற்கு ஏற்ப சுருதியை நிர்ணயிக்கலாம். | பாடல் எந்த சுருதியில் உள்ளதோ அதிலேயே பாட வேண்டும். |
12 | இன்னிசை எனப்படும். | ஒத்திசை எனப்படும். |
13 | மனோதர்ம சங்கீதம் உண்டு. | அவ்வாறில்லை. |
14 | பெருமளவு ராகம், தாளம் உண்டு. | அவ்வாறில்லை |
15 | ஒரு சுவரத்தின் பின்பே அடுத்த சுவரம் ஒலிக்கும். | ஒரே நேரத்தில் பல சுவரம் ஒலிக்க முடியும். |
16 | மெலடிக்கல் இசை. | ஹார்மனிக்கல் இசை. |
17 | சங்கராபரணத்தை அடிப்படையாக வைத்து Notation எழுதப்படும். | அவ்வாறில்லை. |
18 | 22 சுருதி போன்ற நுட்ப சுருதிகள் பயன்படுத்தப்படும். | நுட்ப சுருதிகள் இல்லை. |
19 | பாட்டை கற்க ஆசிரியர் வேண்டும். Notation ஐப் பார்த்து கற்பது கடினம். | Notation ஐப் பார்த்து வாசிக்கலாம். |
20 | இராக ஆலாபனை முக்கிய இடம் வகிக்கிறது. | சுருதியை அடிக்கடி மாற்றி வாசிப்பதைக் காணலாம். ராகம் என்பது கிடையாது. |