இமயமலை கருப்புக் கரடி

பாலூட்டிகளின் துணை இனம்
(கருப்புக் கரடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இமயமலை கருப்புக் கரடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
முதுகெலும்புள்ளவை
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
மாமிச உண்ணி
குடும்பம்:
உர்சிடே
பேரினம்:
உர்சசு
இனம்:
யு. தைபெட்டானசு'
துணையினம்:
யு. டி. லானிகர்
முச்சொற் பெயரீடு
உர்சசு தைபெட்டானசு லானிகர்
போகாக்கு, 1932
வேறு பெயர்கள்

[1]

இமயமலை கருப்புக் கரடி (Himalayan black bear) என்பது திபெத், நேபாளம், சீனா பாக்கித்தான் மற்றும் இந்திய இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஆசிய கருப்புக் கரடியின் துணையினம் ஆகும்.

நீளமான, அடர்த்தியான மென் முடிகளும் மற்றும் சிறிய வெள்ளை நெஞ்சு குறியும் [2] இவற்றை ஆசிய கருப்புக் கரடிகளிடமிருந்து வேறுபடுத்துகின்றன. நேபாளம், சீனா, உருசியா மற்றும் திபெத்தின் 10,000 முதல் 12,000 அடி உயரமுள்ள வெப்பமான இடங்களில் கோடைக்காலங்களில் இமயமலை கருப்புக் கரடிகளை காணமுடியும். குளிர் காலத்திற்காக இக்கரடிகள் 5,000 அடி வரை வெப்பமண்டலக் காடுகளை நோக்கி கீழிறங்கி வந்துவிடுகின்றன. சராசரியாக இமயமலை கருப்புக் கரடிகளின் உடலானது மூக்கிலிருந்து வால் வரை 140 முதல் 170 சென்டிமீட்டர் நீளம் கொண்டுள்ளது. மேலும், இவற்றின் உடல் 91 கிலோ முதல் 120 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது. குளிர்காலத்தை தூங்கிக் கழிக்கும்போது இவ்வகைக் கரடிகள் கொழுப்பு மிகுந்து சுமார் 180 கிலோ எடை வரைக்கும் கூட இருப்பதுண்டு [3].

உணவு

தொகு

இமயமலை கருப்புக் கரடிகள் பொதுவாக அனைத்துண்ணிகளாகும். இவை எல்லா உயிரினங்கள் மற்றும் கிடைக்கும் உணவுகள் எதையும் உண்கின்றன. ஓக் கொட்டைகள், கொட்டை வகைகள், தேன், பழங்கள், வேர்கள் போன்ற தாவர உணவுகளும், கரையான்கள், வண்டுகள் போன்றவையும் இவை கிடைக்காத காலங்களில் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளும் இக்கரடிகளின் உணவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன [3].

இனப்பெருக்கம்

தொகு

சுமார் மூன்று ஆண்டுகளில் இவ்வகைக் கரடிகள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. அக்டோபர் மாத்ததில் தனது இணையுடன் கூடுகின்றன. குளிர்காலத்தை தூங்கிக் கழிக்கும் நிலையிலிருக்கும் தாய் பிப்ரவரி மாதம் இரண்டு குட்டிகளை ஈணுகிறது. புதியதாகப் பிறந்த பிள்ளைக் கரடிகள் பொதுவாக இரண்டாவது வருடம் வரை தங்கள் தாயுடன் தங்கியுள்ளன [3].

தற்போதைய நிலை

தொகு

மனித இனத்தின் ஆக்ரமிப்பும், வனப்பகுதியில் ஏற்படும் தீயும், பெருகிவரும் மரத் தொழில்களும் இமயமலைக் கருப்புக் கரடிகளின் வாழ்விடத்தை குறைத்து இனப்பெருக்கத்தையும் மிகவும் பாதிக்கின்றன என்று பட்டியலிடப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த கரடிகளின் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. 1977 ஆம் ஆண்டு முதல் இமயமலை கருப்பு கரடிகளை வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, இவை வேட்டையாடப்படுதல் ஒரு பெரிய பிரச்சினையாகவே உள்ளது[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Pocock, R. I. (1932). "The Black and Brown Bears of Europe and Asia: Part II". The Journal of the Bombay Natural History Society 36 (1): 115-116. http://biodiversitylibrary.org/page/48198944. 
  2. Pocock, R. I. (1941). The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. Volume 2. Taylor and Francis, London.
  3. 3.0 3.1 3.2 3.3 Bears Of The World. "Himalayan Black Bear". Bears Of The World. Archived from the original on 20 March 2015. பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமயமலை_கருப்புக்_கரடி&oldid=3653100" இலிருந்து மீள்விக்கப்பட்டது