கருப்புப் பாலம் (நீலகிரி)

கருப்புப் பாலம் (Black Bridge) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலமாகும். தற்போது இப்பாலம் மானேக்சா பாலம் என்று அறியப்படுகிறது. இந்த பாலம் வெலிங்டனை ஊட்டி-குன்னூர் சாலையுடன் இணைக்கிறது. 1858 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பாலம் கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்னரே சரிந்து விழுந்தது. தொடக்கத்தில் இப்பாலத்தை வாட்டர்லூ பாலம் என்று அழைத்தனர், 1878 ஆம் ஆண்டில் மரத்தாலான கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இந்த பாலம் மீண்டும் கட்டப்பட்டது [1]. பர்மா தேக்குகளைப் பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டு, கருப்பு வண்ணம் பூசப்பட்டதால் இதை கருப்புப் பாலம் என பொதுவாக அழைக்கிறார்கள் [2][3].

புதுப்பித்தல்

தொகு

பாலம் பாதுகாப்பற்று உள்ளது என 1950 களில் அறிவிக்கப்பட்டது. எனவே 1963 ஆம் ஆண்டு பாலத்தின் மரத்தளம் மாற்றப்பட்டு கற்குழம்புத் தளங்களாக வலுப்படுத்தப்பட்டது. மீண்டும் 2005 ஆம் ஆண்டில் இந்த பாலம் பாதுகாப்பற்றதாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனால் பாலம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது [2][3].

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Wellington Of Yesteryears" (PDF). dssc.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.
  2. 2.0 2.1 Thiagarajan, Shantha (Mar 9, 2009). "Coonoor's Black bridge to be named after Manekshaw". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103065323/http://articles.timesofindia.indiatimes.com/2009-03-09/chennai/28039054_1_sam-manekshaw-new-bridge-field-marshal. பார்த்த நாள்: 2011-11-28. 
  3. 3.0 3.1 "INDIA-BRITISH-RAJ-L Archives". newsarch.rootsweb.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-28.