கருமாணிக்கன்
கருமாணிக்கன் என்னும் பெயரில் இருவர் இருந்தனர். இருவரும் அண்ணன் தம்பியர். தொண்டைமான் வழியில் வந்தவர்கள்.
ஒருவன் மாரீங்கூர் கோயிலுக்கு நிலம் வழங்கியவன். [1]
மற்றொரு கருமாணிக்கன் என்பவன் கப்பல் கோவை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் இவன் புதுக்கோட்டைச் சீமையில் உள்ளது கப்பலூர், துவரங்குறிச்சி என்னும் ஊர்களையுடைய பகுதிகளை ஆண்டுவந்த குறுநிலமன்னன்.[2] பாண்டியனுடைய படைத்தலைவன். பாண்டியனுக்கு உட்பட்ட ஆட்சித் தலைவன். [3]
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ நடுநாட்டுத் திருக்கோவலூர் வட்டம் இராசேந்திர சிங்கநல்லூராகிய மாரீங்கூர் சிவன் கோயில் கல்வெட்டு (கல்வெட்டு நாள் 06 – 10 0 1341) – சதாசிவ பண்டாரத்தார் ஆய்வு முடிவு.
- ↑ கப்பற் கோவை. p. 21.
- ↑ கருமாசிக்கன் கைதவர்க்குப் பாராளும் வீரர் பரிவீர நாராயணன் – சாசனம் 261. தொண்டைமான் யாதவராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் மாணிக்க ஆழ்வான் எனவும் போற்றப்படுபவன். பாண்டிமண்டலத்து முத்தூற்றுக் கூற்றத்து கப்பலூரானுலகளந்த சோழநல்லூர் கரியமாணிக்க ஆழ்வான் திருவுடை நாயகனான வீரபாண்டியக் காளிங்கராயர் – மாறவர்மன் சாரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலம் 7ஆம் ஆண்டு (கி. பி. 1341) கல்வெட்டு.