கரும்பனூர்
கரும்பனூர் திருவேங்கடமலை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய ஊர்.
இந்த ஊரில் கரும்பனூர் கிழான் என்னும் வள்ளல் சங்ககாலத்தில் வாழ்ந்துவந்தான். ஊர்மக்கள் இவனைப் பெரிதும் போற்றியமையால் [1] கரும்பனூர் கிழான் எனப்பட்டான். உறுவரும் சிறுவரும் [2] இவனை மாறி மாறி மொய்த்துக்கொண்டே இருப்பார்களாம். ஆற்றுத் துறையில் உதவும் அம்பி என்னும் பரிசல் போல இவன் அறம் என்னும் துறையில் விளங்கினானாம். வாங்குவோர் தடுத்தாலும் செவிமடுக்காமல் வழங்கிக்கொண்டே இருப்பானாம்.[3] நன்னாகனார் என்னும் புலவர் இவனைப் போற்றிப் பாடியுள்ளார்.