கரும்பிள்ளைப் பூதனார்
சங்ககாலப் புலவர்களில் ஒருவர் கரும்பிள்ளைப் பூதனார். பரிபாடலில் 10ஆம் எண்ணுள்ள பாடல் இவரால் பாடப்பட்டது. வையை ஆற்றில் நடைபெற்ற நீராட்டு விழா பற்றி இப்பாடல் விரிவாகச் சொல்கிறது.
இக்காலத்தில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.
பாடல் தரும் செய்தி
தொகு- இவரது தமிழை அறியும் வகையில் இவர் கையாண்டுள்ள சொற்களைப் கொண்டு செய்திகள் தரப்படுகின்றன.
வைகையாற்றில் வெள்ளம் வந்தது. புனல் மண்டி ஆடச்சனம் மண்டிச் சென்றது. நீராடச் செல்வோர் நீரெக்கி, மூஉய், முதலான விளையாட்டுக் கருவிகளுடன் சென்றனர். குதிரை, பெண்யானை, அத்திரி, சகடம், சிவிகை முதலானவற்றில் ஏறிச் சென்றனர். இன்னினியோர், விரவு நரையோர், வெறு நரையோர், பதிவத மாந்தர், பரத்தையர், பாங்கர் முதலானோர் வித்தகரின் இசை முழக்குடன் சென்றனர்.
கடல் வாணிகம்
தொகுமதக் களிற்றை அடக்குபவர் சங்க கால வாணிகம| திசையறி மீகான் போல் காணப்பட்டனர்.
சங்கம் மருவிய காலத் தமிழ்
தொகு- இழைகள் - பன்மை
- சலம் குடைவார் = நீராடுவார்
- தண்டம் இரண்டு = நின்றும் கிடந்தும் வணங்குதல்
- தண்டு = பல்லாக்கு
- திரிதர்வாய் = அலைந்து திரியும் இடம்
- நகில் = மகளிர் மார்பகம்
- பளிதம் = அரிசி மாவும் வெல்லமும் கலந்து செய்யும் உருண்டை
- பல் சனம் = பலதிறப்பட்ட மக்கள்
- வதி மாலை = ஓய்வு கொள்ளும் மாலை - முதலானவை