கரும்புச்சக்கைத் துகள் அழற்சி

கரும்புச் சக்கைத் துகள்களால் நுரையீரலில் ஏற்படும் ஒரு நோய்

கரும்புச்சக்கைத் துகள் அழற்சி (Bagassosis) என்பது நுரையீரல் அழற்சி நோய்களில் ஒன்றாகும். இந்நோய் இந்தியாவில் முதன்முதலாக 1955 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.[1] சாறு பிழிந்தெடுக்கப்பட்ட கரும்புச்சக்கை, பேகேஸ் (Bagasse) என்றழைக்கப் படுகிறது.[2] இந்தச் சக்கையானது, காகிதம், அட்டை போன்றவை செய்யப் பயன்படுகிறது. இச்சக்கையில் இருந்து வெளிவரும் நுண் துகள்கள். கொண்ட தூசுகளை, மூச்சின் வழியே உள்ளிழுப்பதாலும், தூய்மை செய்யா கரும்புப் பாகு கழிவாலும், 'பேகெசோசிஸ்' எனும் '’’கரும்புத்துகள் மூச்சு அழற்சி நோய்’’’ உண்டாகிறது.[3][4] இந்நோய் அதிதீவிரமாகவோ (Acute), நாள்பட்டதாவோ (Chronic) இருக்கலாம். கரும்பாலைகளும், அதன் சார்பு ஆலைகளும் அமைந்துள்ள தமிழ்நாட்டுத் தொழிலாளர்க்கும் இந்நோய் நேர்கிறது.

Bagassosis
ஒத்தசொற்கள்29637 (DiseasesDB), MeshID D011009, வார்ப்புரு:CIE-10, வார்ப்புரு:CIE-9
சிறப்புpulmonology
அறிகுறிகள்குருதியுடனான கோழையுடன் இருமல்
சிக்கல்கள்மூச்சுத்திணறல்
காரணங்கள்துகள் அழற்சி
தடுப்புதுகள்களிலிருந்து விலகல்
இறப்புகள்இல்லை
கரும்புச்சக்கை
தூய்மை செய்யா கரும்புப் பாகு கழிவு

நோய் அறிகுறிகள்

தொகு

அதிதீவிர நிலையில், இக்கரும்புச்சக்கையைக் கையாளப்படும் தொழிற்சாலையிலுள்ள தொழிலாளர்க்குத் திடீரென்று மூச்சு இடர், மற்றும் சளியுடன் இரத்தம் கலந்த இருமலும் தோன்றும்; காய்ச்சலும் காணப்படும்; நாடித்துடிப்பு, மூச்சு விகிதமும் அதிகரித்து நுரையீரல் அழற்சி போன்ற அறிகுறிகள் தோன்றும். மார்பு எக்ஸ்கதிர் படத்தில் இங்குமங்குமாக நுரையீரல் அழற்சி நிழல்கள் காணப்படும்.

மருத்துவம்

தொகு

இந்தத் தொழிற்சாலைச் சுற்றுச் சூழலிலிருந்து நோயாளி அகற்றப்பட்டால், மருத்துவம் எதுவும் இல்லாமலேயே குணமடைவார். மீண்டும் அதே வேலைக்குச் சென்றால், மறுபடியும் மேற்கூறிய அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு இந்நோயின் அறிகுறிகள் படிப்படியாக உருவாகி, நோய் நாள்பட்ட நிலையை அடைகிறது.

நோய்த் தடுப்புமுறைகள்

தொகு

இந்நோய் நீக்குதலில் தடுப்பு முறைகளே அடிப்படையானது. கரும்புச் சக்கையைத் தொழிலாளர்கள் கைகளைக் கொண்டு அகற்றுவதற்குப் பதிலாக இயந்திரங்களைக் கையாண்டால் நோய் பெருமளவு தடுக்கப்படும். மேற்கூறிய தொழில் வழி நோய்களுக்கெனச் சிறப்பு மருத்துவம் எதுவும் இல்லை; நோய்த் தடுப்பே சிறந்ததாகும்.

அஸ்பெஸ்டாஸ் மற்றும், பெரில்லியம் (Beryllium), சிலிக்கா , நிலக்கரி, பொதுப்படையான தூசுகள், பஞ்சு, சணல், ஐசோசையனேட்டுகள் (Isocya nates). மரத்தூள், மாவுகள், வைக்கோலில் உள்ள காளான், ரேடான் (Radon) மற்றும் கலப்பட நுகர்பொருள்கள் போன்ற பல பொருள்கள் தொழில்வழி நோய்களை உண்டாக்கி நுரையீரல்களைப் பாதிக்கின்றன.

சான்றுகள்

தொகு
  1. https://www.epainassist.com/chest-pain/lungs/bagassosis
  2. Hur, T; Cheng KC; Yang GY (October 1994). "Hypersensitivity pneumonitis: bagassosis". Gaoxiong Yi Xue Ke Xue Za Zhi 10 (10): 558–564. பப்மெட்:7807612. 
  3. "Recent trends in bagassosis in Japan". Br J Ind Med 49 (7): 499–506. July 1992. doi:10.1136/oem.49.7.499. பப்மெட்:1637710. 
  4. "Hur"- Hur, T; Cheng KC; Yang GY (October 1994). "Hypersensitivity pneumonitis: bagassosis". Gaoxiong Yi Xue Ke Xue Za Zhi 10 (10): 558–564. பப்மெட்:7807612.