கருவிகள், கைத்தொழில்கள் வரலாற்றுக் கழகம்
கருவிகள், கைத்தொழில்கள் வரலாற்றுக் கழகம் (Tools and Trades History Society) (TATHS) என்பது கைக்கருவிகளையும் மரபு கைவினைத் தொழில்களையும் அறியயவும் புரிந்துகொள்ளவும் முயலும் குறிக்கோள் உள்ள ஓர் ஐக்கிய அரசி கழகமாகும். இது உறுப்பினர்வழி இயங்கும் கழகமாக 1983 இல் தொடங்கி வைக்கப்பட்டது. இது ஒரு பதிவு செய்த அறக்கட்டளையாகும்.
இக்கழகம் கைக்கருவிகளும் கைத்தொழில்களும் எனும் பருவமுறை இதழையும் செய்தி மடலையும் காலாண்டுமுறையில் வெளியிடுகிறது. [1]
கண்காட்சி
தொகுசமூகத்தின் திரள்வைப்பில் உள்ள தேர்ந்தெடுத்த மரபுப் பொருட்கள் மேற்கு சுசெக்சில் அருண்டேலுக்கு அருலில் அமைந்த அம்பெர்லி மரபுச் சின்ன அருங்காட்சியகத்தின் கருவிகள் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ளன.
நூலகம்
தொகுகைக்கருவிகள், கைவினைத்தொழில்கள் வரலாற்றுக் கழகம் (TATHS), பெர்க்சயரில் உள்ள ஆங்கில ஊரக வாழ்வு படித்தல் அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்பு நூலகத்தையும் நடத்தி வருகிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ TATHS: Journal
- ↑ "Museum of English Rural Life: The Tools & Trades History Society Library". Archived from the original on 2017-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.