கருவிப்பெட்டி (கல்வியியல்)

கருவிப்பெட்டி என்பது கற்றல் கற்பித்தலில் ஒவ்வொரு பாடத்தலைப்பிற்கும் ஏற்றவாறு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊடகங்கள், பொருட்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சேகரித்து வைக்கப்படும் பெட்டி ஆகும்.

தயாரிக்கும் முறை

தொகு

ஆசிரியர் பாடப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தனது கற்பித்தல் முறைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு தயாரித்து கொள்ளலாம். மாணவர்களை பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தலாம். அவ்வாறு மாணவர்களை ஈடுபடுத்தும் பொழுது, அவர்களுக்கு ஆர்வம் பெருகும், பொருட்களைச் சரியான முறையில் கையாளுவதற்கும், சேதம் விளைவிக்காமல் பாதுகாப்பதற்குமான பொறுப்புணர்வு ஏற்படும். சேகரித்து வைக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியாதாகவும், அதிக செலவில்லததாகவும் இருத்தல் நலம். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஒத்த திறன்களுக்கேற்ப பொருட்கள் சேகரிக்கப்பட்டிருப்பின், எல்லா பாடங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

சேகரித்து வைக்கப்படும் பொருட்கள்

தொகு
  • உண்மை பொருட்கள்
  • மாதிரிப் பொருட்கள்
  • புத்தகத் தொகுப்புகள்
  • சிறுவர் கலைக்களஞ்சியங்கள்
  • வரைபடங்கள்
  • படங்கள் அடங்கிய தொகுப்புகள்
  • தேசப்படங்கள்
  • பூமி உருண்டை
  • பொம்மலாட்டங்கள்
  • சிறு சிறு சோதனைகளைச் செய்து காண்பிப்பதற்குத் தேவையான பொருட்கள்
  • வரைக்கோட்டுப்படங்கள்
  • சுருள்படங்கள்
  • தலைமேல் படவீழ்த்திக்கான ஒளி ஊடுறுவும் தாள்கள்
  • நழுவங்கள்
  • ஒளி/ஒலி நாடாக்கள்

போன்ற அனைத்தையும் சேகரித்து வைக்கலாம்

பயன்கள்

தொகு
  • மாணவர்களின் முழு பங்கேற்பைத் தூண்டுகிறது.
  • பல்புலன்வழிக் கற்றல் மற்றும் தனியாகக் கற்றலை மேம்படுத்துக்கிறது.
  • கற்றலை மகிழ்ச்சியுடையதாக மாற்றுகிறது.
  • வரையறுக்கப்பட்ட கற்றல் நோக்கங்கள், குறிப்பிட்ட உபகரணங்கள் மூலம் விளக்கப்படுவதால் கற்றல் எளிமையாக்கப்படுகிறது.

உசாத்துணைகள்

தொகு
  1. கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும் (இரண்டாம் ஆண்டு), முனைவர் D.குமார், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், கல்லூரிச் சாலை, சென்னை-600 006, (2009), பக்கம்:8,9
  2. கல்விநுட்பவியல், வளநூல், ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, முனைவர்.அ.பன்னீர்ச்செல்வம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், கல்லூரிச் சாலை, சென்னை-600 006, (2001), பக்கம்:47-59
  3. செய்முறைப் பயிற்சி, வளநூல், ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, முனைவர்.பி.எஸ். பாலசுப்ரமணியன், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், கல்லூரிச் சாலை, சென்னை-600 006, (2009), பக்கம்:79-117