கருவூரார் பூசாவிதி
கருவூரார் பூசாவிதி என்னும் நூல் கருவூரில் வாழ்ந்த கருவூரார் எனும் சித்தரால் செய்யப்பட்ட நூல். இவரது நூலில் கையாளப்பட்டுள்ள சொற்கள் இவரை 16ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளுகின்றன. இந்த நூலில் 30 விருத்தப் பாடல்கள் உள்ளன.
- நூலில் உள்ள சில செய்திகள்
- பாணம் வைத்து, தேவி பூசை செய்து சீர் பெற்றவர்கள் 18 சித்தர்கள் [1]
- மலர் போட்டுப் பூசித்தால் ஆதியை ஐம்பொறிகளால் காண முடியாது. மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும். [2]
- பாம்பணி பூண்ட சிறு பெண்ணாக அறிவைப் பறிக்க வருவாள்[3]
- ஒரு பாடல் பகுதி
- ஆம்எனவும் ஊம்எனவும் இரண்டும் கூட்டி
- அப்பனே ஓம்என்ற மூன்றும் ஒன்றாய்
- நாம்எனவும் தாம்எனவும் ஒன்றே ஆகும்
- நல்லவர்கள் அறிவார்கள் காமி காணான். [4]
- நகைச்சுவை
கருவிநூல்
தொகு- சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
- வீ. ஜெயபால் (பதிப்பாசிரியர்), அருள்மிகு சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி, அகத்தியர் சன்மார்க்க சங்கம் வெளியீடு, தஞ்சாவூர், 2008