கருவூர்க் கலிங்கத்தார்
கருவூர்க் கலிங்கத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கலிங்கத்திலிருந்து கருவூர் வந்து வாழ்ந்தவர்.[1] அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 183 (பாலைத் திணை)
கலிங்கம் என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். எனவே இவர் துணி வாணிகம் செய்தவர் எனக் கொள்ளலாம். இவரது இயற்பெயர் தெரியவில்லை.
பாடல் தரும் செய்தி
தொகுதலைமகன் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. தலைவன் திரும்பவில்லை. வாக்குத் தவறமாட்டார் என்றாயே, அவர் வரவில்லையே என்று தலைவி தோழியைக் கேட்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
உவமை நலம்
தொகுயானைகள் கூட்டம் கூட்டமாக மேய்வது போல மழை மேகங்கள் வானத்தில் மேய்கின்றனவாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 40.