கருவூர்க் கோசனார்

சங்க கால புலவர்

கருவூர்க் கோசனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 214.

பாடல் தரும் செய்தி

தொகு

பிரிந்து சென்றவர் வரவில்லை. என் தோள் வளையல் நழுவுகிறது. அதைப் பார்த்துச் சிரிப்பது போல வானம் மின்னுகிறது. சிரித்துக்கொண்டு ஆரவாரம் செய்வது போல இடித்து முழங்குகிறது. இது அவர் திரும்பி வந்து உனக்கு அலரிப் பூ சூட்டுவேன் என்று சொன்ன பருவ காலம். ஆனால் அவர் இன்னும் வரவில்லை - இப்படித் தலைவி தோழியிடம் சொல்லிக் கவலை கொள்கிறாள்.

உலகியல் - பொருள் தேடும் நோக்கம்

தொகு

பாடலின் பகுதி

தொகு

'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு இன்ம் என
வினை வயின் பிரிந்த வேறுபடு கொள்கை'

விளக்கம்

தொகு

பொருள் தேடுவதன் நோக்கம் மூன்று.

  1. பாராட்டுப் பெறுவதற்காக
  2. பொருள் தரும் இன்பம் துய்ப்பதற்காக
  3. ஈட்டிய பொருளை இல்லாமல் நாடி வருவோருக்கு வழங்கி மகிழ்வதற்காக
  • அசைதல் = சோம்பலாய் இருத்தல்

சோம்பேறியாய் இருப்பவர்களுக்குப் பொருள் சேராது.

மேற்கோள்கள்

தொகு
  1. கா., கோவிந்தன் (1964). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - கக. மாநகர்ப் புலவர்கள் -2. (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 41.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூர்க்_கோசனார்&oldid=4121511" இலிருந்து மீள்விக்கப்பட்டது