கருவூர்ச் சேரமான் சாத்தன்

கருவூர்ச் சேரமான் சாத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கருவூரில் இருந்துகொண்டு அரசாண்ட சேர அரசன் என்பதை இவரது பெயரால் உணரமுடிகிறது. இவர் அரசராகவும் புலவராகவும் விளங்கியவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 258. (குறிஞ்சித் திணை)

பாடல் தரும் செய்தி

தொகு

தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். தோழி தலைவியிடம் கேட்கிறாள்.

அவர் வந்திருக்கிறார். நீ என்ன செய்யப் போகிறாய்? போய்வருகிறீர்களா என்று அவரை அனுப்பிவைக்கவும் முடியவில்லை. இவளை அடையாமல் போனால் திரும்ப வருவீர்களா என்று கேட்கவும் முடியவில்லை. இடி முழங்கும் நள்ளிரவில் அரும்பாடு பட்டு வந்திருக்கிறார். நான் என்ன செய்யட்டும்?