கருவூர்ப் பவுத்திரனார்

கருவூர்ப் பவுத்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 162.

பாடலால் பெயர் பெற்ற புலவர்களில் இவரும் ஒருவர். (இப்போது தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் பவுத்திரம் என்னும் பெயர் கொண்ட ஊர் ஒன்று உள்ளது. அதன் வடபால் ஏரி ஒன்று உள்ளது. அதன் நீரலைநால் அவ்வூரைப் பவுத்திரம் என்றனர்) இந்தப் புலவர் தம் பாடலைக் 'கார் புறந்தந்த நீருடை வியன்புலம்' என்று தொடங்குகிறார். ( பௌவம் = நீரலை. பௌவம் < பவுத்திரம்)

பாடல் தொகு

கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரும் புல் என் மாலை
முல்லை வாழியோ முல்லை நீ நின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்று இது தமியோர் மாட்டே.

பாடல் தரும் செய்தி தொகு

தலைவன் பொருள் தேடப் பிரிந்திருக்கும் காலத்தில் மாலை வேளையில் மலரும் முல்லைப் பூ தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தலைவி கூறுகிறாள். தன்னைப் பார்த்துச் சிரிப்பது தகுமோ என்றும் வினவுகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூர்ப்_பவுத்திரனார்&oldid=622136" இலிருந்து மீள்விக்கப்பட்டது