கரூரா (Karura, 迦 楼 羅?) என்பது சப்பானிய இந்து-புத்த மதப் புராணங்களில் காணப்படும் மனித உடல் மற்றும் பறவை போன்ற[1] தலை கொண்ட ஒரு தெய்வீக உயிரினம் ஆகும்.

சிறகற்ற கரூரா சிலை, சப்பான், கோஃபுகுயி கோவிலில் , எட்டாம் நூற்றாண்டு

இந்து மதத்தில் உள்ள பிரம்மாண்டமான[2] பறவை இனம் கருடன் ஆகும். (சமசுகிருதம்: Garuḍa[1] गरुड ; பாலி: Garuḷa) சப்பானிய புத்த மதப்பதிப்பை அடிப்படையாகக் கொண்டு கரூரா என ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதே உயிரினம் konjichō (金翅鳥?, lit. "தங்கச் சிறகுப் பறவை", Skr. suparṇa) எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

தீயைச் சுவாசிக்கும்[2] மிகப்பெரிய உயிரினம் என்றும், பாம்புகள் மற்றும் கடல் நாகங்களை உணவாகக் கொள்ளும்[2] என்றும் மலைகளை வாழிடமாகக் கொண்டிருக்கும் என கரூராவைப் பற்றிக் கூறப்படுகிறது.

சப்பானிய அச்சிபூசு (八部衆?, "எண்வகை தேவர்கள் வகை) என்ற பாதுகாப்பு அலகில் இருந்து மாற்றப்பட்ட ஒரு மாற்று இனங்களில் ஒன்று கரூரா எனக் கருதப்படுகிறது[3][4].

கோஃபுகுயி i கோவிலில் உள்ள கரூரா சிலை, நாரா (கண் திறப்பு விழாவின் போது வைக்கப்பட்ட எட்டு தேவர் சிலைகளில் ஒன்று, எட்டாம் நூற்றாண்டு காலம், படம்.) ஒரு பிரபலமான உதாரணம் ஆகும். இந்த கரூரா சிலை சீன டாங் வம்சத்தின் பாணியில் கவசம் அணிவிக்கப்பட்டு இறக்கையில்லா கரூராவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறகுடன் கூடிய மனித உடலும் பறவை தலையும் கொண்டிருப்பதுதான் கரூரா என்று பல்வேறு நூல்களும் சப்பானிய ஆவணங்களும் தெரிவிக்கின்றன.

நுண்கலைகளில் கரூரா தொகு

 
கரூரா கிகாகு நடன் முகமுடி

சப்பானிய கிகாகு நடனக் கலையில் கரூரா முகமுடி அணிந்து நடனம் ஆடுகிறார்கள் புதோ-மையோ சிலையின் பின்புறம் உள்ள ஒளிவட்டம் கரூரா ஒளிவட்டம் எனப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Shinchosha (1985). 新潮世界美術事典 (Shincho Encyclopedia of World Art). Shinchosha. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:4-10-730206-7. 
  2. 2.0 2.1 2.2 Shinmura, Izuru (1976). 広辞苑(Kōjien). Iwanami. . Japanese dictionary, 2nd revised edition
  3. Murano, Takao (1997). 興福寺国宝展(Kōfukuji kokuhō ten)(exhibit catalog). Tetsurô Kôno (trans.). Art Research Foundation. , Item #3-2, p.vii (English caption), 32-33 (photo), p.189 (text by Kaneko, Tomoaki(金子智明))
  4. The multilexic Shinchosha 1985 dictionary does not give an English or any other language equivalent for this entry.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூரா&oldid=2172312" இலிருந்து மீள்விக்கப்பட்டது