கரேம்மா நாயக்

இந்திய அரசியல்வாதி

கரேம்மா நாயக் (Karemma Nayak) கருநாடகாவை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கருநாடகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] இவர் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள தேவதுர்கா சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முன்னாள் அமைச்சர் கே. சிவநாகவுடா நாயக்கை தோற்கடித்தார்.

பின்னணி தொகு

ராய்ச்சூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கரேம்மா. இவர் ஐதராபாத்து-கருநாடகா பகுதியில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வருகிறார். இவர் நில மாபியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளார். இவர் பல பொய் வழக்குகளில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. 2005ல் முஸ்தூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்துள்ளார்.

2023 செப்டம்பரில், பாஜகவிற்கு ஜனதா தள ஆதரவை எதிர்த்தார்.[4] சூன் 2023-இல், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள பந்தேகுட் தாண்டாவில் ஒரு கும்பலால் இவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Live, A. B. P. (2023-05-13). "Devadurga Election Result 2023 Live: Jd(s) Candidate Karemma Wins From Devadurga". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  2. "Karnataka Assembly Election Results 2023: Full list of winners - India Today". web.archive.org. 2023-05-14. பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  3. "Three first-time MLAs enter Assembly from Yadgir and Raichur districts" (in en-IN). https://www.thehindu.com/elections/karnataka-assembly/three-first-time-mlas-enter-assembly-from-yadgir-and-raichur-districts/article66850376.ece. 
  4. DHNS. "Karnataka: Devadurga JD(S) MLA opposes party's alliance with BJP in 2024 LS polls". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  5. Goudar, Mahesh M. (2023-06-06). "JD(S) ST woman MLA from Devadurga, Karemma Nayak, accuses BJP workers of assault; 1 arrested". The South First (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேம்மா_நாயக்&oldid=3908376" இலிருந்து மீள்விக்கப்பட்டது