கரைவலை மீன்பிடிப்பு
கரையில் நின்று விரிக்கப்பட்ட வலையை இழுத்து மீன் பிடிக்கும் முறை கரைவலை மீன்பிடிப்பு ஆகும். தென்னிலங்கையில் இது பெருவலை எனப்படுகிறது. இந்த முறை இலங்கையிலும், தமிழகத்திலும் பயன்படுத்தப்படும் ஒரு மரபு நுணுக்கம் ஆகும். தமிழகத்தில் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட வலைகளைக் கொண்ட இழுவையும் தற்போது நடைபெறுகிறது. ஈழப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்பு முல்லைத்தீவில் தமிழர்களின் கரைவலை உரிமை மறுக்கப்பட்டு, சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மீனவர்கள் குற்றச்சாட்டி உள்ளார்கள்.[1]