கரோலினா தங்கம்

கரோலினா தங்கம் (Carolina Gold) என்பது அமெரிக்காவின் தென் கரோலினாவில் பாரம்பரியமாக வளர்க்கப்படும் நெல் வகைகளுள் ஒன்றாகும். இதன் உமியின் நிறம் "தங்கம்" போன்று காணப்படுவதால் இப்பெயர் வந்தது.[1]

அடிமைப்படுத்தப்பட்ட மக்களால் தென் கரோலினாவில் (தென் கரோலினா லோ கன்ட்ரியில்) நெல் வளர்க்கப்பட்டது. இந்நெல் ஏராளமான செல்வத்திற்கு வழிவகுத்தது.[1] இது இப்பகுதி உணவில் பிரதானமாக இருந்தது. பின்னர் மெதுவாக மறைந்தது; 2000 களின் முற்பகுதியில் தென் கரோலினா தங்க அமைப்பினால் மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு வரப்பட்டது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Smith, Hayden R. (2019). Carolina's Golden Fields: Inland Rice Cultivation in the South Carolina Lowcountry, 1670–1860. Cambridge Studies on the American South. Cambridge UP. pp. 12–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781108423403.
  2. Shields, David S. (2015). Southern Provisions: The Creation and Revival of a Cuisine. U of Chicago P. pp. x–xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226141114.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலினா_தங்கம்&oldid=3080855" இலிருந்து மீள்விக்கப்பட்டது