கரோலின் எல்லன் பர்னெசு

கரோலின் எல்லன் பர்னெசு (Caroline Ellen Furness) (ஜூன் 24, 1869 – பிப்ரவரி 9, 1936) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாசர் கல்லூரியில் கல்வி பயிற்றுவித்தார். இவர் வாசர் கல்லூரியில் மேரி வாட்சன் விட்னேயிடம் பயின்றார். கொலம்பியாவில் வானியலில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் இவரே.

இவர் ஓகியாவில் உள்ள கிளீவ்லாந்தில் 1869 ஜூன் 24 இல் பிறந்தார். இவரது தந்தையார் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆவார். இவருக்கு இவரது தந்தையார் இளமை முதலே அறிவியலில் ஆர்வம் ஊட்டினார். இவர் 1887 இல் வாசர் கல்லூரியில் பட்டம் பெற்ரதும் தந்தையர் வழியைப் பின்பற்ரி பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆனார். என்றாலும் அவரது உண்மையான ஆர்வம் ஆராய்ச்சியில் கால்கொண்டு இருந்தது. எனவே, மூன்றாண்டுகளானதும் வாசர் கல்லூரியில் ஆய்வு உதவியாளராக மேரி வாட்சன் விட்னேயிடம் சேர்ந்தார்.இவர் விட்னேயிடம் பத்தாண்டுகளுக்கு வால்வெள்ளி, கோள்கள் நோக்கீடுகளில் ஈடுபட்டார். இவர் 1896 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரோல்டு யாகோபியின்கீழ் முனைவர் ஆய்வில் ஈடுபட்டார். இவர் 1900 இல் முனைவர் ஆய்வை முடித்து வெளியிட்டார். இவரது முனைவர் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு "Catalogue of stars within one degree of the North pole and optical distortion of the Helsingfors astro-photographic telescope deduced from photographic measures" என்பதாகும். இவர் 1903 இல் வாசர் கல்லூரியில் மீண்டும் வந்து பயிற்றுநராகச் சேர்ந்தார்.[1]

இவர் 1909 முதல் 1911 வரை விட்னேவுடன் இணைந்து மாறும் விண்மீன்கள் சார்ந்த நோக்கிடுகளில் பங்குபற்றினார்.[2] இவர்1915இல் மாறும் விண்மீன்களின் ஆய்வுக்கான அறிமுகம் எனும் உயரிய தரம் வாய்ந்த பாடநூலை எழுதினார்.[3][4][5]

இவர் 1922 இல் அரசு வானியல் கழக உறுப்பினர் ஆனார்.[1]

இவர் 1936 பிப்ரவரி 9 இல் நியூயார்க் நகரில் இறந்தார்.[1]

இவர் வெளிநாட்டு மகளிர் கல்விக்காக பாடுபட்டவர். குறிப்பாக யப்பனியப் பெண்களின் உயர்கல்விக்காக பல பரப்புரைக் கட்டுரைகள் வாயிலாகப் போராடியவர். இவர் அமெரிக்காவில் தேசியப் பெண்கள் ஒன்றிய உறுப்பினரும் களப் பணியாளரும் ஆவார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Creese, Mary, ed. (1998). "Observers, "Computers", Interpreters and Popularizers: Women In Astronomy". Ladies in the Laboratory?. The Scarecrow Press. pp. 227–228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8108-3287-9.
  2. Larsen, Kristine. "Caroline Ellen Furness (1869-1936)". கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
  3. Hockey, Thomas R. (2007-09-18). Biographical Encyclopedia of Astronomers. Springer. pp. 396–397. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387304007.
  4. "Caroline E. Furness - Vassar College Encyclopedia". Vassar College. பார்க்கப்பட்ட நாள் June 17, 2014.
  5. Makemson, Maud W. (May 1936). "Caroline Ellen Furness". Popular Astronomy 44 (5): 233–238. Bibcode: 1936PA.....44..233M. http://adsabs.harvard.edu/full/1936PA.....44..233M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_எல்லன்_பர்னெசு&oldid=4041963" இலிருந்து மீள்விக்கப்பட்டது