கரோலின் டி. ஜென்டில்

கரோலின் டோரிஸ் ஜென்டில்(Caroline Doris Gentile) (ஜனவரி 24, 1924-செப்டம்பர் 19,2008)[1] என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஆவார். 1946ல் மெயின் பல்கலைகழகத்தில் உடற்கல்வி ஆசிரியையாக சேர்ந்து உடற்கல்விக்கான கலைத் திட்டத்தையும் வடிவமைத்து கொடுத்துள்ளார். மேலும் மெயின் பல்கலைகழத்தின் உடற்கல்வி துறைக்கு ஐந்து லட்சம் டாலர் பரிசளித்துள்ளார்.[2]

பேராசிரியர்
கரோலின் டி. ஜென்டில்
பிறப்புஜனவரி 24, 1924
நியூட்டன், மாசச்சூசெட்ஸ்
இறப்புசெப்டம்பர் 19, 2008(2008-09-19) (அகவை 84)
பிரெஸ்க், ஐலே, மெயின்
தேசியம்அமெரிக்கர்
பணிஉடற்கல்வி பயிற்றுவிப்பாளர்
பட்டம்கல்வித் துறையில் இணைப் பேராசிரியர்
விருதுகள்Maine Women's Hall of Fame, 2000
கல்விப் பின்னணி
கல்விஇளங்கலை, சார்ஜன்ட் கல்லூரி, 1946
முதகலை, நியூயார்க்கு பல்கலைக்கழகம், 1949
கல்விப் பணி
துறைஉடல்நலம், உடற்கல்வி மற்றும் பொழுதுபோக்கு
கல்வி நிலையங்கள்பிரெஸ்க் தீவில் உள்ள மெயின் பல்கலைக்கழகம்

ஆரம்ப காலம் மற்றும் கல்வி தொகு

கரோலின்,[3] அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் ஜெரார்டோ ஜென்டில் மற்றும் டோனடா புச்செல்லி ஜென்டில் என்ற தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் உள்ளனர்.[1]

வளைதடிப் பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கால்பந்துடென்னிசு, மற்றும் அடிபந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை நியூட்டன் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக விளையாடியதனால், அப்பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் இவரின் பெயர் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற தலைப்பில் இடம்பிடித்தது.[4]

விருதுகள் தொகு

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மெயின் பல்கலைகழகத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவின் போது கரோலினுக்கு முனைவர் பட்டம் அளித்து சிறப்பித்தது.[1][5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Caroline D. Gentile". Bangor Daily News. 23 September 2008. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
  2. Brown, Wayne L. (31 August 2002). "Professor gives $500,000 to UMPI". Bangor Daily News: p. C1. https://news.google.com/newspapers?nid=2457&dat=20020830&id=4gJbAAAAIBAJ&sjid=9E0NAAAAIBAJ&pg=1734,4037988&hl=en. 
  3. "Graduation Exercises: Newton High School". Internet Archive. 6 June 1942. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
  4. "Newtonian". Internet Archive. 1942. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
  5. "Maine Women's Hall of Fame Honorees – Caroline Gentile". University of Maine at Augusta. 2016. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_டி._ஜென்டில்&oldid=3705455" இலிருந்து மீள்விக்கப்பட்டது