கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றம், பெங்களூரிலுள்ள சட்டசபை கட்டிடமான விதான் சௌதாவிற்கு எதிரில் உள்ள அட்டாரா கச்சேரி ( பதினெட்டு அலுவலகம்) கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கம்பீரமாய் எழுந்து நிற்கும் விதான சௌதாவுக்கு எதிரில் சிவப்பு நிறத்தில் செம்மையாய் நீதியை நிலைநாட்டி வருகிறது உயர்நீதிமன்றம். இக்கட்டிடம் ராவ் பகதூர் ஆற்காடு நாரயணசாமி முதலியார் என்பவரால் கட்டப்பட்டு 1868 ல் முடிக்கப்பட்டது. பதினெட்டு துறைகள் மைசூர் அரசிலிருந்து மாற்றியமைக்கப்பட்டு இங்கே அமைந்ததனால் “பழைய பொது அலுவலகம்” என்னும் பெயர் கொண்ட இக்கட்டிடம், பின் பதினெட்டு அலுவலகம் என மாற்றப்பட்டது. கி.பி 1982 ல் இக்கட்டிடம் இடிப்பதற்காக முடிவு செய்யப்பட்டு, பின் பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலும், பழைய வாய்ந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டியதன் பேரிலும் முடிவு கைவிடப்பட்டது.[1][2][3]

கர்நாடகா உயர்நீதிமன்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Cite constitution
  2. "High Court of Karnataka Official Web Site".
  3. "High Court sees highest number of judges at 43". 9 January 2020 இம் மூலத்தில் இருந்து 21 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201221075045/https://www.thehindu.com/news/national/karnataka/high-court-sees-highest-number-of-judges-at-43/article30517359.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_உயர்_நீதிமன்றம்&oldid=4165002" இலிருந்து மீள்விக்கப்பட்டது