கர்ப்பூரி தாக்கூர் அமைச்சரவை

கர்ப்பூரி தாக்கூர் அமைச்சரவை (karpoori Thakur ministry) 1977 ஆம் ஆண்டு சூன் மாதம் 24 ஆம் தேதி கர்ப்புரி தாக்கூர் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அமைக்கப்பட்ட அமைச்சரவையை குறிக்கிறது. அப்போது நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சனதா கட்சி மொத்தமுள்ள 325 இடங்களில் 214 தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றிபெற்றது[1]. சத்யேந்திர நரைன் சின்காவை தோற்கடித்து கர்ப்பூரி தாக்கூர் பீகார் சட்டப்பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் விவரம்[2] கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள்

தொகு
  • கர்ப்பூரி தாக்கூர் – முதலமைச்சர்
  • கைலாசுபதி மிசுரா – முதலமைச்சருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட அமைச்சர்
  • சோகேசுவர் மண்டல்
  • கபில்தியோ சிங்
  • தாக்கூர் பிரசாத்
  • அனுபுலால் யாதவ்
  • திருமதி. சுமித்ரா தேவி
  • சச்சிதானந்த் சிங் - நீர்ப்பாசன அமைச்சர்
  • சாபீர் உசேன் - சுகாதார அமைச்சர்
  • தாக்கூர் முனேசுவர் சிங் - எரிசக்தி மற்றும் பின்னர் நீர்ப்பாசன அமைச்சர்
  • சாம்சர் சாங் பகதூர் சிங் – தொழிலாளர் துறை அமைச்சர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar Assembly Election Results in 1977". Archived from the original on 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-03-05.
  2. Google