கற்சல்லடைத் தட்டு
கற்சல்லடைத் தட்டு (madreporite /ˌmædrɪˈpɔːraɪt/)[1] என்பது நட்சத்திர மீனில் காணப்படும் கால்வாய் மண்டலத்தின் பகுதியாகும். இது வாய் எதிர்பரப்பில் வட்டவடிவமான தட்டுபோன்று காணப்படும். குற்றிலைப் பரப்படுக்குச் செல்களால் மூடப்பட்டுக் காணப்படும். சல்லடையில் காணப்படுவதுபோல பல புழைகள் காணப்படும். இவற்றிலிருந்து தொடரும் புழைக்கால்வாய்கள் காணப்படும். இப்புழைக் கால்கள் கற்சல்லடையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சிறு பைபோன்ற பிதுக்கப் பையில் (ஆம்புலா) திறக்கின்றன.