கற்பனைச் சமூகவுடமை

கற்பனைச் சமூகவுடமை (Utopian socialism) என்பது, நவீன சமூகவுடமையின் தொடக்கச் சிந்தனை ஓட்டம் ஆகும். என்றி டி செயின்ட் சைமன், சார்லசு ஃபூரியர், ராபர்ட் ஓவென் போன்றோரின் படைப்புக்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள். மேற்படி ஆக்கங்களிலிருந்தே கார்ல் மார்க்சும், பிற தொடக்ககால சமூகவுடமை வாதிகளும் தூண்டுதல்களைப் பெற்றனர். எனினும், புரட்சிகர சமூக சனநாயக இயக்கங்களுக்கு எதிரான இந்தக் கற்பனையான இலட்சியச் சமூகங்கள் பற்றிய நோக்கு, சமூகத்தின் பொருள்சார் நிலைமைக்கு மாறானது என்றும் அதனால் இது திரிபுவாதம் என்றும் பார்க்கப்பட்டது. எக்காலத்தையும் சேர்ந்த ஒருவரோ அல்லது ஒரு தொகுதி எண்ணங்களோ கற்பனைச் சமூகவுடமை சார்ந்ததாகக் கருதப்படலாமாயினும், 19 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் வாழ்ந்த சமூகவுடமைவாதிகளின் சிந்தனைகளைக் குறிப்பதற்கே பிற்காலச் சமூகவுடமைவாதிகள் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அச்சிந்தனைகளை நடைமுறைக்கு ஒவ்வாதவை என்று மறுக்கும் ஒரு எதிர்மறைச் சொல்லாகவே "கற்பனை" என்ற அடைமொழி பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பனைச்_சமூகவுடமை&oldid=1578373" இருந்து மீள்விக்கப்பட்டது