கற்பு என்பது திருமணமாகாத பெண் அல்லது ஆண் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மை அல்லது ஒரு திருமணம் ஆன பெண் அல்லது ஆண் அவர்களது கணவன் அல்லது மனைவியைத் தவிர வேறு யாருடனும் உடலுறவு கொள்ளாத நிலை ஆகியவற்றைக் குறிக்கும்.[சான்று தேவை]

பெண்ணின் கற்புதொகு

இந்திய நாட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு முன் பெண்ணின் கற்பு அல்லது கன்னித்தன்மை மிக முக்கியமான ஒன்றாகும்.[மேற்கோள் தேவை] திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை இழந்த பெண் திருமணம் செய்ய தகுதியில்லதவராகவே சமுதாயத்தால் பார்க்கப்படுகிறாள்.[மேற்கோள் தேவை]

கற்பு பற்றி சமயங்களின்தொகு

இசுலாம்தொகு

இசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச்சட்டப்படி திருமணத்திற்கு முன் கற்பிழந்தப்பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.[சான்று தேவை]

கிறிஸ்தவம்தொகு

கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] கடவுள் மனிதருக்கு தந்த பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை விபச்சாரம் செய்யாதே என்றும் ஒன்பதாவது கட்டளையில் பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே என்றும் கட்டளையிடுகின்றன. இவை மனிதன் கற்போடு வாழ கட்டளையிடுகின்றன. மத்தேயு நற்செய்தி ஐந்தாவது அதிகாரம் 23-வது வசனத்தில் இயேசு தனது போதனையில் ஏழாவது கட்டளையை இன்னும் ஆழமாக விளக்குகிறார். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பு&oldid=1852215" இருந்து மீள்விக்கப்பட்டது