கலகர சாய் இலட்சுமண இராவு

இந்திய அரசியல்வாதி

கலகர சாய் இலட்சுமண இராவு (Kalagara Sai Lakshmana Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கே. எசு. இலட்சுமண இராவு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். ஆந்திரப் பிரதேச சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

கலகர சாய் இலட்சுமண ராவு
Kalagara Sai Lakshmana Rao
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மார்ச்சு 2019
தொகுதிகிருசுணா-குண்டூர் ஆசிரியர் தொகுதி
பதவியில்
26 மார்ச்சு 2007 – 25 மார்ச்சு 2015
தொகுதிகிருசுணா-குண்டூர் ஆசிரியர் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசுயேட்சை
வேலை
தொழில்விரிவுரையாளர்r

தொழில்

தொகு

2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை குண்டூரில் உள்ள இந்துக் கல்லூரியில் அரசியல் அறிவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இயன் விஞ்ஞான வேதிகாவின் மாநில துணைத் தலைவராக உள்ளார். ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பல இயக்கங்களை வழிநடத்தும் ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பில் ஓர் உறுப்பினராக உள்ளார்.[1]

2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் கிருசுணா-குண்டூர் ஆசிரியர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார். இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று முதல் தடவையாக சபைக்குள் நுழைந்தார். 5,670 வாக்குகளை இவர் பெற்றார். அடுத்த போட்டியாளர் 2,210 வாக்குகளைப் பெற்றார்.[2]

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 76 சதவீதத்திற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதிவான 10,211 வாக்குகளில் 7,625 வாக்குகள் இவருக்கு கிடைத்தன. அடுத்த போட்டியாளர் 1,928 வாக்குகளைப் பெற்றார்.[3]

2015 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி அதே தொகுதியில் இவர் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் 5,383 வாக்குகளும் வெற்றி பெற்றவர் 7,146 வாக்குகளும் பெற்றனர்.[4]

2019 ஆம் நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு 68,120 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிவில், பதிவான 1.49 லட்சம் வாக்குகளில் 80,670 வாக்குகளை இவர் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலகர_சாய்_இலட்சுமண_இராவு&oldid=3847922" இலிருந்து மீள்விக்கப்பட்டது